வீடியோ; யுவராஜ் சிங் குறித்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரிடம் ஆணவத்துடன் பதிலளித்த அஸ்வின்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திர அஸ்வின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யுவராஜ் சிங் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கடு கடு முகத்துடன் பதிலளித்தது கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் சென்னையை தவிர்த்து இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் புள்ளி பட்டியலில் இரண்டவது இடத்தில் இருக்கும் தமிழக வீரர் ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஹைதராபாத் அணியுடனான கடந்த போட்டியில் சீனியர் வீரர் யுவராஜ் சிங்கை கழட்டிவிட்டது.
யுவராஜ் சிங்கை நீக்கிய பஞ்சாப் அணியின் முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் யுவராஜ் சிங் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து இன்று பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அஸ்வின் கடு கடு முகத்துடன் பதிலளித்துள்ளார்.
வீடியோ;
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் அஸ்வினிடம் யுவராஜ் சிங் குறித்த நிலை என்ன என்று கேள்வி கேட்டார், இந்த கேள்வியை கேட்ட உடன் கடும் ஆத்திரமடைந்த அஸ்வின் “What..? What Update..? நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேனே, யுவாஜ் சிங்கிற்கு பதிலாக மனோஜ் திவாரி அணியில் சேர்க்கப்பட்டு விட்டார்” என்று ஆணவத்துடன் பதிலளித்தார்.
அஸ்வின் ஆணவத்துடன் பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அஸ்வினுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.