அஸ்வின், இஷான் கிஷன் வேண்டாம்… ஆஸ்திரேலியாவை அடிக்க இந்த 11 வீரர்களை எடுங்கள்; ஆடும் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்
முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை துவங்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்குவதோடு, இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
தனது ஆடும் லெவனில் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ள சுனில் கவாஸ்கர், மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயரை தேர்வு செய்துள்ளார். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோருக்கு தனது ஆடும் லெவனில் இடம் கொடுக்காத சுனில் கவாஸ்கர், ஐந்தாவது வீரரான கே.எல் ராகுலை தேர்வு செய்துள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்துள்ள சுனில் கவாஸ்கர், பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் பும்ராஹ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்;
சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, பும்ராஹ்.