இந்த விசயத்தில் இவர் தான் மிக சிறந்த விக்கெட் கீப்பர் ; அஸ்வின் ஓபன் டாக் !!

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தன்னுடைய அபாரமான பந்து வீச்சின் மூலமும் அதிரடியான பேட்டிங் மூலமும் பல முறை இந்திய அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக மூன்று விதமான தொடர்களிலும் மிகச் சிறந்த முறையில் விளையாடி வந்த அஸ்வின் கடந்த சில வருடங்கள் இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் லிமிடெட் ஒரு போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றபின் இனி அஸ்வினை அனைத்துவிதமான தொடர்களிலும் பார்க்கலாம் என்று பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

நடந்து முடிந்த நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் மிக சிறந்த முறையில் பந்துவீசி 14 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சிறந்த ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார் மேலும் சிறந்த பந்து வீச்சாளர் களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் இரண்டாவது இடத்தை பிடித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல பாராட்டுகளை பெற்று வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஸ்வின் கிரிக்கெட் தொடர் சம்பந்தமான பல கருத்துக்களை பேசுவதுண்டு, அதேபோன்று ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து பதிவிட்டும் வருவார்.

இந்த நிலையில் அவரிடம் தோனி,தினேஷ் கார்த்திக் மற்றும் சகா ஆகிய மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மிக சிறந்தவர் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், தோனி,தினேஷ் கார்த்திக் மற்றும் சகா ஆகிய மூன்று பேருமே மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்கள்தான் ஆனால் இவர்களில் ஒருவரை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளேன்.

நான் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக் உடன் பல போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளேன், ஆனால் இவர்களில் என்னை பொறுத்த வரையில் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான்,அதற்கு உதாரணம் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யும் பொழுது நான் வீசிய பந்து பவுன்ஸ் ஆகி பிடிக்க முடியாத உயரத்திற்கு சென்றது, அதையும் கச்சிதமாக பிடித்து கோவன் விக்கெட்டை தோனி சிறந்த முறையில் வீழ்த்தினார். மேலும் சகாவும் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் தான் என்று அஸ்வின் தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.