உலகக்கோப்பை தொடரில் மீண்டும் ப்ளூ ஜெர்சி அணிந்து ஆடுவேன் – அஸ்வின் நம்பிக்கை
யூஜவேந்திர சகால், குல்தீப் யாதவ் போன்ற இளம் திறமை வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களிடம் தனது லிமிடெட் ஓவர் வாய்ப்புகளை இழந்து தவித்து வருகிறார் அஸ்வின்.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வரும் அஸ்வின் ஒருநாள் அணியால் இடம் பிடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.
டிஎன்பில் தொடரின் மூன்றாவது சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக ஆடப் போகுந் அஸ்வின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமியர் லீக்) தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அஸ்வின், அந்த அணியின் ஜெர்சி அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.
இந்திய அணியில் தேர்வாவது முற்றிலுமாக என் கையில் இல்லை. நான் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரன் என தேர்வுக்குக்குழு நினைக்கிறது எனப்தை சார்ந்துள்ளது. அது முற்றிலுமாக என் கையில் இல்லை.
நான் 2019 உலகக்கோப்பை தொடரில் ஆட வேண்டும். மற்ற வீரர்களை போலவே நானும் உலகக்கோப்பை தொடரில் ப்ளூ ஜெர்சி அணிந்து ஆட வேண்டும் என நினைக்கிறேன்.
இந்திய அணி தற்போது நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. மேலும், ஒரு நல்ல அணி கட்டமைக்கப்பட்டுள்ளது.
என கூறினார் அஸ்வின்.
மேலும் ,
தோனிக்கும் அஸ்வினுகுமிடையே ஏற்பட்ட மோதலால் தான் அஸ்வின் சென்னை அணியில் விளையாடவில்லை என்றும், இருவருக்கும் போட்டி என்றும் பல வதந்திகள் கிளம்பி வந்தன.
Photo by: Arjun Singh / IPL/ SPORTZPICS