அனில் கும்ப்ளே போனா இந்தியா அவ்ளோதான்னு சொன்னாங்க.. இப்போ அனில் கும்ப்ளே ரெக்கார்டையே உடைத்துக்காட்டிய அஸ்வின்!

பார்டர் கவாஸ்கர் டிராபியில் அனில் கும்ப்ளேவின் ரெக்கார்டை உடைத்து புதிய வரலாறு படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியில், நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் இன்னிங்சில் 480 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

இந்திய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுளர்கள் பட்டியலில், 111 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருந்த அனில் கும்ப்ளேவின் ரெக்கார்டை உடைத்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஒட்டுமொத்தமாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், 113 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கும் நேத்தன் லயனின் சாதனையை இந்த இன்னிங்சில் சமன் செய்திருக்கிறார் அஸ்வின்.

பார்டர் கவாஸ்கர் டிராஃயிபில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள்.

1. அஸ்வின் – 113 விக்கெட்டுகள் (குறைவான இன்னிங்ஸ் அடிப்படையில் முதலிடம்)

2. நெதன் லயன் – 113 விக்கெட்டுகள்

3. அனில் கும்ப்ளே – 111 விக்கெட்டுகள்

4. ஹர்பஜன் சிங் – 95 விக்கெட்டுகள்

5. ரவீந்திர ஜடேஜா – 75 விக்கெட்டுகள்

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மண்ணில் 26 ஆவது முறையாக 5+ விக்கெட்களை ஒரு இன்னிங்சில் கைப்பற்றுகிறார்.

ஒட்டுமொத்தமாக 31வது முறையாக 5+ விக்கெட்டுகளை ஒரு இன்னிங்சில் கைப்பற்றுகிறார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், முதல் இன்னிங்சில் 16 முறை இரண்டாவது இன்னிங்சில் 16 முறை என்று சமநிலை வைத்திருக்கிறார்.

இதன் மூலம் கும்ப்ளேவின் மற்றுமொரு சாதனையை முறியடித்துள்ளார். இந்திய மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5+ விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் அஸ்வின் மற்றும் அணில் கும்ப்ளே தலா 25 முறை எடுத்திருந்தனர். 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 26வது முறையாக 5+ விக்கெட்டுகள் கைப்பற்றி அவரது சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.