ரவீந்தர ஜடேஜா காய்ச்சலால் அவதி, எழுந்தரிக்க முடியா நிலையில் பரிதாபம்
பெரிதும் எதிர்பாரக்கப்படும் இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடர் துவங்க இன்னும் ஒரு நாள் மட்டும் இடைவெளி உள்ள நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்தர ஜடேஜா காய்ச்சல் காரணமாக எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் படுத்துள்ளார்.
நாளை மறுநாள் ஜன.05 ஆம் தேதி கேப்டவுனில் துவங்க இல்ல இந்த டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் சீரிய முறையில் பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாள ரவீந்தர ஜடேஜா பயிற்சிக்கு செல்லவில்லை. மேலும், அவரது உடல் நல பாதிக்கப்பட்டுள்ளதாக பல கேள்விகள் எழுந்தது.
தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவிற்கு ‘வைரல் காய்ச்சல்’ வந்துள்ளது. தற்போது இதன்காரணமாக எழுந்து பயிற்சி கூட பெற முடியாத படி படுத்த படுக்கையாக கிடைகிறார் ஜடேஜா. கடந்த இரண்டு நாட்களாக இந்த காய்ச்சல் அவருக்கு இருந்து வருகிறது.
இன்னும் சிக மணி நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார். 48 மணி நேரத்தில் அவர் மீண்டும் சரியாக மைதானத்திற்கு வந்து ஆட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன இருந்தாலும், போட்டி துவங்கும் அன்று ஜன.05ஆம் தேதி காலை தான் ஜடேஜாவின் நிலை தெரிய வரும். இதனால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவரை அவர் பயிற்சி பெறாததால் ஆடும் லெவனில் இருக்க தேர்வில் வர மாட்டார் என தெரிகிறது.
தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர் தான் ஆட முடியும் என இருந்தது. ஒரு ஜடேஜா இல்லை அஸ்வின். மிஞ்சி போனால் யூஜெவேந்திர சகால் இறக்கப்படலாம். ஆனால் அணியில் இறக்க அதிக வாய்ப்பு ஜடேஜாவிற்கு தான் இருந்தது.
ஏனெனில், தென்னாப்பிரிக்க அணியில் பேட்ச்மேனின் இரண்டு பேர் மட்டுமே இடது கை பேட்மேன்கள் ஆவர். மற்றவர்கள் அனைவரும் வலது கை பேட்மேன்கள் ஆனதால், கமடிப்பாக ஜடேஜா களம் இறக்கப்பட வாய்ப்புகள் இருந்தது. தற்போது ஜடேஜா காய்ச்சாளால் அவதிப்பட்டு வரும் நிலையில் கண்டிப்பாக அந்த இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் காலம் இறங்குவார் என தெரிகிறது