ரவீந்திர ஜடேஜா சிறந்த கேப்டன் என்பதில் எந்த ஒரு மாறுபட்ட கருத்தும் கிடையாது என்று மொயின் அலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் வெற்றிகர அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2022 ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி வராமல் வெளியேறியது.
Photo by Deepak Malik/ Sportzpics for IPL
இதற்கு முக்கிய காரணம் சென்னையின் கேப்டனாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜாதான் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சென்னை அணியை தோனியே எப்பொழுதுமே வழி நடத்த முடியாது என்பதால், தோனிக்கு பிறகு ஒரு கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று 2022 ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜாவை சென்னை அணி கேப்டனாக நியமித்தது, ஆனால் இவருடைய தலைமையின் கீழ் எட்டு போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 6 போட்டியில் பரிதாப தோல்வி அடைந்து, பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக சென்னை அணியை மீண்டும் தோனியே வழிநடத்தினார். இந்த நிகழ்வு ஜடேஜாவிர்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை அணியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மொயின் அலி ரவீந்திர ஜடேஜாவிர்க்கு ஆதரவாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
ஜடேஜா குறித்து மொயின் அலி பேசுகையில்,“ஜடேஜா கேப்டன்ஷிப்பில் அனுபவமில்லாதவராக இருந்தார், இதனால் சென்னை அணி இந்த வருடம் மிகவும் திணறியது, மேலும் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை, ஆனால் ஜடேஜா தனிப்பட்ட முறையில் நல்ல அறிவுள்ளவர், எதிர்காலத்தில் ஒரு அணியை தலைமை தாங்குவதற்கான அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது,நான் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளேன்,அதேபோன்று ஜடேஜா தலைமையின் கீழும் விளையாடியுள்ளேன், குணம் ரீதியாக இரண்டு பெருக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை, அவர்கள் இருவருமே தங்களுடைய வீரர்களுக்கு நேர்மையாகவும் உள்ளனர். மேலும் அருமையான வீரர்கள், புத்திசாலித்தனமான கேப்டன்கள்” என்று மோயின் அலி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.