இத மட்டும் செய்யலேனா இனி உங்களுக்கு இடமே கிடைக்காது தம்பி… ஜடேஜாவை எச்சரித்த முன்னாள் வீரர் !!

ரவீந்திர ஜடேஜா, தான் இந்திய அணிக்கு பயனுள்ள வீரர் என்பதை தேர்வாளர்களிடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று சஞ்சய் மஞ்சரெக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகர ஆள்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும்பொழுது தன்னுடைய அபாரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் ஒற்றை ஆளாக நின்று இந்திய அணியை கரை சேர்த்த ஜடேஜாவிற்கு தற்பொழுது இந்திய அணியில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்னதான் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரைப் போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அக்சர் பட்டேல், அஸ்வின், தீபக் ஹூடா போன்ற சுழற் பந்துவீச்சு ஆள்ரவுண்டர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

இதன் காரணமாக இந்திய அணி தேர்வாளர்கள் இவர்களில் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலையில் உள்ளனர். வேகப்பந்துவீச்சு வீசும் ஆல்ரவுண்டர்களில் தற்போதைய நிலையில் ஹர்திக் பாண்டியாவை தவிர வேறு யாரும் போட்டி போட முடியாது, அதனால் அவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது, ஆனால் சுழற் பந்துவீசும் ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் வரிசை கட்டிக்கொண்டு உள்ளனர், இதனால் அவர்களுக்குள்ளேயே இந்திய அணியில் யார் விளையாட போகிறார்கள் என்ற போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் மேற்கூறப்பட்ட சிக்கல் இந்திய அணியில் நிலவுவதையும் ஜடேஜா, தன்னுடைய இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு தேர்வாளர்கள் மத்தியில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதும் ஜடேஜாவிற்கு நன்றாக தெரியும் என்று சர்ச்சைகளுக்குப் பெயர் போன சஞ்சய் மஞ்சரெக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் மஞ்சரெக்கர் தெரிவித்ததாவது, “இந்திய அணியில் இப்படி ஒரு வலுவான போட்டி நிலவுவது ஜடேஜாவிற்கு நன்றாகவே தெரியும், தற்பொழுது ஜடேஜா இந்திய அணி தேர்வாளர்களை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இடத்தைப் பொறுத்து அணி நிச்சயம் வீரர்களை தேர்வு செய்யும், ஜடேஜா பவுலிங் ஆல்ரவுண்டராக போட்டி போட வேண்டும் என்றால் அவர் நிர்வாகத்திடம் தான் அக்சர்பட்டேலை விட சிறந்த வீரர் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். பேட்டிங்கை பொருத்தவரை அக்சர் பட்டேலா.. அல்லது ஜடேஜாவா.. என்றால் அதில் ஜடேஜா தான் சிறந்தவர். ஆனால் பந்துவீச்சில் ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் மற்றும் அஸ்வின் மிகச்சிறந்த திறமை படைத்தவர்கள். குறிப்பாக அக்சர் பட்டேல் ஜடேஜாவை விட ஒரு சுத்தமான பந்துவீச்சாளர்” என்று சஞ்சய் மஞ்சரெக்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.