மிடில் ஆர்டரில் இவரின் பேட்டிங் இந்திய அணிக்கு மிகவும் அவசியம் – சிஎஸ்கே வீரர் குறித்து பேசிய கங்குலி!

மிடில் ஆர்டரில் இவரின் பேட்டிங் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் – சிஎஸ்கே வீரர் குறித்து பேசிய கங்குலி!

இந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பேட்டிங் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பேட்டியளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக இருந்து வந்த அஸ்வின், ஜடேஜா இருவரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வித போட்டிகளிலும் தொடர்ந்து இடம்பெற்று அசத்தி வந்தனர்.

ஆனால் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இந்தியா படுதோல்வி அடைந்த பிறகு, இருவரும் வெளியேற்றப்பட்டு, யூசுவேந்திர சாஹல் மற்றும் குலதீப் யாதவ் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதனை பயன்படுத்திக்கொண்ட இருவரும், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய தொடர்களில் சென்று சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா தொடர்ந்து லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டனர்.

ஆனால், ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு திரும்பினார்.

சமீப காலமாக அவர் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் மாறுபட்ட அணுகுமுறையை காண முடிகிறது. உலகக்கோப்பை அரையிறுதியில் இறுதிக்கட்டம் வரை போராடி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

விண்டீஸுக்கு எதிரான 3வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 39 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

“இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வெற்றி. வாழ்த்துக்கள். நெருக்கடியான போட்டியில்  சிறப்பான பேட்டிங் ஃபெர்பார்மன்ஸ். பேட்டிங்கில் ஜடேஜா முன்னேற்றம் அடைந்துள்ளார். அது இந்திய அணிக்கு முக்கியமானது” என கங்குலி தெரிவித்துள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.