உலகின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கிடையாது, ஜடேஜா தான் பாராட்டு மழை பொழிந்த ஆகாஷ் சோப்ரா.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது, இதில் 4ஆம் தேதி மோஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு காரணம் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 175 ரன்களும், பந்துவீச்சு 9 விக்கெட்களும்(முதல் இன்னிங்ஸ்-5,2வது இன்னிங்ஸ்-4) எடுத்து அசத்தியுள்ளார்.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாள் ஓய்வில் இருந்த ஜடேஜா, மீண்டு வந்த முதல் போட்டியிலேயே இப்படி அதிரடியாக விளையாடி அசத்தியது, அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, மீண்டும் ஒரு முறை சிறப்பாக விளையாடி அசத்திய ஜடேஜாவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டி வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ரவீந்திர ஜடேஜாவை இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸைவிட சிறந்த ஆல்ரவுண்டர் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து சோப்ரா பேசுகையில்,“தற்பொழுது பூமியிலேயே மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் யார் என்று கேட்டால், அது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா தான். நான் ஜடேஜாவை இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விட சிறந்தவர் என்று கூறுகிறேன், ஏனென்றால் பென் ஸ்டோக்ஸ்(Batting Alrounder) பேட்டிங்-ஆல்ரவுண்டர், ஆனால் ஜடேஜா பந்துவீச்சு-ஆல்ரவுண்டர்(Bowling Alrounder). மேலும் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சு டெஸ்ட் போட்டியில் அந்த அளவிற்கு எடுபடவில்லை. நான் தற்பொழுது கேமரான் கிரீன் குறித்து பேசவில்லை அவர் இன்னும் இளமையான மற்றும் திறமையான வீரர்.நான் பேசுவதெல்லாம் பெண் ஸ்டோக்ஸ் குறித்து தான்,சிலர் ஜடேஜா தனது சொந்த மண்ணில் தானே இவ்வளவு ரன்கள் அடித்து உள்ளார். என்று பேசுகிறார்கள், ஸ்டோக்சும் அவருடைய நாட்டில் தான் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவில் வந்து பென் ஸ்டோக்ஸ் 170 ரன்கள் எடுக்க முடியாது, ஆனால் ஜடேஜா வெளிநாட்டு மைதானங்களில் பேட்டிங்கிலும் அசத்துகிறார். அவரால் 50 முதல் 70 ரன்கள் எளிதாக எடுத்து விட முடியும். மீண்டும் நான் ஏன் ஜடேஜாவை பென் ஸ்டோக்ஸ் விட சிறந்த ஆல்ரவுண்டர் என்று கூறுகிறேன் என்றால், ஜடேஜா பந்துவீச்சு ஆல்ரவுண்டர்,ஆனால் பென் ஸ்டோக்ஸ் அப்படி கிடையாது,அவர் ஒரு பேட்டிங்-ஆல்ரவுண்டர் என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.