இந்த நூற்றாண்டில் மதிப்புமிக்க இந்திய வீரர் இவர்தான்! அது சச்சினோ, தோனியோ அல்லது கோலியோ இல்லை! வெளியான புள்ளிவிவரம்

இந்த நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரராக ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது விஸ்டன் நிறுவனம்.

கிரிக்விஷ் என்கிற தகவல் ஆய்வுச் சாதனம் மூலமாகக் கணக்கிடப்பட்டதில் 97.3 ரேட்டிங் பெற்று இந்தப் பெருமையை அடைந்துள்ளார் ஜடேஜா.

அதேபோல இதே தகவல் ஆய்வின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புள்ள வீரர்களின் பட்டியலில் முரளிதரனுக்கு அடுத்ததாக 2-ம் இடம் பிடித்துள்ளார் ஜடேஜா.

பேட்டிங், பந்துவீச்சில் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் 31 வயது ஜடேஜா அற்புதமாகப் பங்களிப்பதால் இந்த நூற்றாண்டின் மதிப்புமிக்க இந்திய வீரராக ஜடேஜா தேர்வாகியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 213 விக்கெட்டுகளும் 1869 ரன்களும் எடுத்துள்ள ஜடேஜா, ஒருநாள் கிரிக்கெட்டில் 187 விக்கெட்டுகளும் 2296 ரன்களும் எடுத்துள்ளார்.

கிரிக்விஷ்-ன் ஃபிரெட்டி வைல்ட் ஜடேஜாவின் தேர்வு பற்றி கூறியதாவது:

இந்தியாவின் நெ.1 வீரராக ஜடேஜா தேர்வானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கலாம். இத்தனைக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எப்போதும் தேர்வு செய்யப்படுவதில்லை. ஆனால் எப்போது தேர்வானாலும் முன்னணி பந்துவீச்சாளராகவும் பேட்டிங்கில் 6-ம் நிலை வீரராகவும் விளையாடுகிறார். இதனால் அவருடைய பங்களிப்பு அதிகமாக உள்ளது.

MANCHESTER, ENGLAND – JULY 10: Ravindra Jadeja of India reaches his half century during resumption of the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand after weather affected play at Old Trafford on July 10, 2019 in Manchester, England. (Photo by Michael Steele/Getty Images)

அவருடைய பந்துவீச்சு சராசரியான 24.62, வார்னேவை விடவும் சிறந்ததாக உள்ளது. பேட்டிங் சராசரியான 35.26, ஷேன் வாட்சனை விடவும் அதிகமாக உள்ளது. 1000 ரன்களும் 150 விக்கெட்டுகளும் எடுத்த வீரர்களில் ஜடேஜாவுக்கு பேட்டிங் – பந்துவீச்சு இடையிலான சராசரியில் 10.62 ரன்கள் வித்தியாசம் உள்ளது. இந்த நூற்றாண்டில் இதற்கு 2-வது இடம். மிகவும் தரமான ஆல்ரவுண்டர் அவர் என்றார்.

கிரிக் விஸ் அளிக்கும் பகுப்பாய்வுகளின் படி உலகில் ஒவ்வொரு வீரருக்கும் எம்விபி ரேட்டிங் அளிக்கப்படும், புள்ளி விவர மாதிரி அடிப்ப்படையில் போட்டியில் குறிப்பிட்ட வீரர் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் இந்த எம்விபி ரேட்டிங் அளிக்கப்படும்.

இது தொடர்பாக கிரிக் விஸ் அனலிடிக்ஸின் ஃப்ரெடி வைல்ட் கூறும்போது, “ஜடேஜா இந்தியாவின் நம்பர் 1 என்று வந்தது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனெனில் டெஸ்ட் அணியில் அவர் இடம் நிரந்தரமல்ல. முதல் வரிசை பவுலராக அவர் தேர்வு செய்யப்படுகிறார். பேட்டிங்கில் 6ம் நிலையில் களமிறங்குகிறார். போட்டியில் தன்னை சகல விதங்களிலும் ஈடுபடுத்திக் கொண்டு பங்களிப்பு செய்கிறார்” என்றார்.

மொத்த ரன் எண்ணிக்கை, விக்கெட் எண்ணிக்கை அடிப்படையில் ஜடேஜா தேர்வு செய்யப்படவில்லை. அவர் போட்டியில் ஏற்படுத்தும் தாக்கம் தான் முக்கியம். அவரது பேட்டிங் பவுலிங் சராசரி வித்தியாசம் 10.62 ரன்கள். இது இந்த நூற்றாண்டில் குறைந்தது 150 விக்கெட்டுகள், 1000 ரன்கள் எடுத்தவர்களில் இரண்டாவது சிறந்த சராசரி வித்தியாசமாகும் என்கிறார் அனலிடிக்ஸின் ஃப்ரெடி வைல்ட்.

Mohamed:

This website uses cookies.