இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வாளை எடுத்து அதை ஒரு தேர்ந்த போர் வீரனைப் போல சுழற்றி மிரள வைத்தார்.
அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு வைரல் ஆனது. அந்த வீடியோவைக் கண்ட முன்னாள் இங்கிலாந்து வீரர் அவரை கலாய்த்துள்ளார்.
ஜடேஜா வீட்டில் புல்வெளி வெட்டாமல் இருப்பதை சுட்டிக் காட்டி அவரை கிண்டல் செய்துள்ளார். அதற்கு ஜடேஜா பதிலும் கூறி உள்ளார்.
போட்டிகளில் அரைசதம், சதம் அடித்தால் கிரிக்கெட் பேட்டை, வாள் போல வீசுவார் ஜடேஜா. அதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூட அதை மகிழ்ச்சியுடன் கைதட்டி ரசிப்பார். இது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, பிற நாட்டு வீரர்கள் மத்தியிலும் பிரபலம்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஜடேஜா, தன் வீட்டின் புல்வெளிப் பகுதியில் நின்று உண்மையான வாளை எடுத்து அதை சுழற்றிக் காட்டினார்.
இதேபோல குதிரை ஏற்றத்தையும் அவ்வப்போது செய்து வீடியோ வெளியிடுவார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அரைசதம் அடித்து விட்டால், தனது பேட்டை ஒரு வாள் போன்று சுற்றி ரசிகர்களை மகிழ்ச்சி பெற வைப்பார்.
இந்நிலையில் வைரஸ் தாக்கம் காரணமாக வீட்டில் சும்மா இருக்க முடியாமல் ஒரு போர் வாளை எடுத்து தன்னை ஒரு போர் வீரனாக பாவித்துக் கொண்டு சுழற்றி வீடியோ வெளியிட்டுள்ளார் ரவிந்திர ஜடேஜா.
அவர் ஒரு புல்வெளியில் நின்று கொண்டே இதனை செய்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்த முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன், வீட்டில் புற்கள் உள்ளது, அந்த வாளை வைத்து அதை நிறைவேற்றுங்கள் என்று கிண்டல் செய்தார்.
இதற்கு பதிலளித்த ரவீந்திர ஜடேஜா எப்படி வெட்ட வேண்டும் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால் இதுபோன்று போர் வாளை எடுத்து சுற்றுவது, அரசு அனுமதி இல்லாமல் துப்பாக்கியை எடுத்து வெறுமனே சுட்டு விளையாடுவது என இது போன்று பல பிரபலங்கள் ரசிகர்களை தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது பல வன்முறைகளுக்கும் காரணமாக அமைய வாய்ப்புள்ளது. இவர்களைப் பின்பற்றும் ரசிகர்களும் இதனை செய்ய மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இது போன்று தேவையில்லாத பதிவுகளை வீரர்கள் அல்லது பிரபலங்கள் செய்ய வேண்டாம் என்பதே ஒரு நல்ல குடிமகனின் கருத்தாக உள்ளது.