ரவீந்திர ஜடேஜா இருக்கையில் நான் அணியில் இடம் பெறுவது சந்தேகம்தான்! முக்கிய வீரர் அதிர்ச்சி!

இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்த ஆண்டு துவக்கத்தில் அக்ஷர் பட்டேல் விளையாடினார். மிக சிறப்பாக விளையாடி அனைவரது நற்பெயரையும் இவர் சம்பாதித்துக் கொண்டார். முதல் டெஸ்ட் தொடரிலேயே மிக அற்புதமாக பந்துவீசி மொத்தமாக 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மூன்று போட்டிகளில் அவர் விளையாடி இத்தனை விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி மிக சிறப்பான வெற்றியை அடைந்தது.

இந்தியாவின் வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்று தான் நாம் கூற வேண்டும். ஆனால் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இவருக்கு ஆறு ஆண்டு காலம் இடைவெளி தேவை பட்டிருந்தது. இருப்பினும் தனது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு புதிய சாதனையை அவர் படைத்தார்.

ரவிந்திர ஜடேஜா தான் முதல் சாய்ஸ் ஆக இருப்பார்

இதுகுறித்து தற்போது பேசியுள்ள அக்சர் பட்டேல், ரவிந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளனர். எனவே ரவீந்திர ஜடேஜா இருக்கையில் நான் விளையாடுவது கடினம்தான். அவர் அனைத்து வகை ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்பவர்.

எனவே எப்பொழுதும் இந்திய அணிக்கு அவர்தான் முதல் சாய்ஸாக இருப்பார். இருப்பினும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வேலையில் நான் என்னுடைய முழுப் பங்களிப்பை எப்பொழுதும் வழங்குவேன் என்று கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் என்னுடைய நெருக்கமான நண்பர்

மேலும் பேசிய அவர், ரிஷப் பண்ட் தன்னுடைய மிக நெருக்கமான நண்பர் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் டெல்லி அணியில் விளையாடும் வேளையில் பல நேரங்களில் நகைச்சுவைகளை சொல்லி அணி வீரர்களை உற்சாகப் படுத்திக் கொண்டே இருப்பார். அணி வீரர்களின் மனநிலையை பொறுத்து அவர் நடந்து கொள்வார்.

மேலும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கும்போது மனதளவில் நாங்கள் பின் தங்கி இருந்தால் எங்களிடம் வந்து நகைச்சுவையாக பேசி பாசிட்டிவ் எண்ணங்களை எப்பொழுதும் அவர் வழங்கிக் கொண்டே வருவார். அவர் இருக்கையில் அவரைச் சுற்றியுள்ள அனைவரும் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று அவரைப் பற்றி பெருமையாக கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.