முனாப் படேல் பந்திலேயே அவுட் ஆகிருக்க.. நீ பும்ராவை பற்றி பேசலாமா?: பாக்., முன்னாள் வீரரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை குழந்தை பவுலர் என விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 2011 உலகக்கோப்பை வைத்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து பேட்டி ஒன்றில் தனது கருத்தினை தெரிவித்தார்.
அதில் ரசாக் கூறியதாவது:
‘கிளைன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஒரு குழந்தை பவுலர். இப்போது விளையாடி இருந்தால் அவரது பந்து வீச்சுக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தி இருப்பேன்’ என்றார்.
இதனைக்கேட்ட இந்திய ரசிகர்கள் ரசாக்கை கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில், அப்துல் ரசாக் முக்கிய கட்டத்தில் முனாப் படேல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதனை வைத்து கலாய்க்கின்றனர்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சராசரியாக மணிக்கு 142 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர் அதிகபட்சமாக 153 கி.மீ வேகத்திலும் வீசியுள்ளார். கடந்த உலகக்கோப்பை போட்டியில் கூட அனைத்து நாட்டு வீரர்களும் பும்ராவின் பந்து வீச்சில் ரன் எடுக்க சற்று திணறுகின்றனர்.
2011 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முனாப் படேல் பந்து வீச்சில் அப்துல் ரசாக் 3 ரன்கள் மட்டுமே எடுத்து கிளீன் போல்ட் ஆனார். முனாப் படேல் 116 கிமீ மணி வேகத்தில் பந்து வீசிய போதே போல்ட் ஆனவர், பும்ரா பந்து வீச்சை அடித்து நொறுக்குவேன் என கூறுவது மிகவும் வேடிக்கையானது என கிண்டலடித்தனர்.

Prabhu Soundar:

This website uses cookies.