இந்த ஐபிஎல் அணிக்காக விளையாடப் போகும் வனிண்டு ஹசரங்கா! வெளியான செய்தி!

இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் மூன்று போட்டிகளில் மொத்தமாக 100 ரன்கள் ( 54, 26 மற்றும் 20 ) எடுத்து பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் தன்னுடைய திறமையை நிரூபித்தார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது பேட்டிங்கிலும் தன்னுடைய திறமையை நிரூபித்தார். இதன் காரணமாக தொடர் நாயகன் விருதும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. மேலும் ஐசிசி டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மிக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மீதி ஐபிஎல் போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் இவரை வாங்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாற்று வீரராக விளையாட வைக்க ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவு

இந்த ஆண்டு முதலில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் தொடரில் இருந்து வெளியேறினார்கள். இவர்களுக்கு தகுந்த மாற்று வீரரை ஆர்சிபி அணி இதுவரை தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் விளையாட போவதில்லை என்பதாலும் தகுந்த மாற்று வீரரை ஆர்சிபி அணி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில் சமீபத்தில் மிக சிறப்பாக ஒரு ஆல்ரவுண்டர் வீரராக விளையாடி வரும் வணிண்டு ஹசரங்காவை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக பிசிசிஐ இடமும் அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியம் இடத்திலும் முறையான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரன் கூறியது தற்பொழுது நடைபெறப் போகிறது

இந்தியாவுக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடி வந்த ஹசரங்கா நிச்சயமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இடம் பெறுவார் என்றும் அவரை ஏதேனும் ஒரு அணி நிச்சயமாக கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டு மொத்தம் 10 அணிகள் விளையாடும் போது ஆளும் நிச்சயமாக ஏதேனும் ஒரு அணியில் உள்ளூர் ஸ்பின் பந்து வீச்சாளரை தாண்டி, வெளியூர் ஸ்பின் பந்து வீச்சாளர் தேவைப்படும் பட்சத்தில் இவரை நிச்சயமாக அந்த அணியை வாங்க முயற்சிக்கும் என்று கூறியிருந்தார். அவர் கூறியது ஏறக்குறைய இந்த ஆண்டே நடைபெறப் போவது இலங்கை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.