சிறிய சிறிய தருணங்களில் பெங்களூர் வெற்றி பெற வேண்டும்: நெஹ்ரா

ஜெய்பூரில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2019-ன் 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானேவினால் முதலில் பேட் செய்ய அனுப்பப்பட்ட விராட் கோலியின் ஆர்சிபி அணி 8 ஓவர்கள் முடிவில் 67 ரன்களுக்கு விராட் கோலி விக்கெட்டை இழந்துள்ளது.

விராட் கோலி 25 பந்துகள் நின்று விசித்திரமான ஒரு இன்னிங்சில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார் 3 பவுண்டரிகளில் இரண்டு பவுண்டரி எட்ஜ் பவுண்டரிகளாகும்.

ஒன்று ஆஃப் ஸ்பின்னர் கவுதம் பந்தில் அவர் ஆட நினைத்த இடம் வேறு ஆனால் பந்து உள்விளிம்பில் பட்டு பவுண்டரிக்குப் பறந்தது, 2வதாக தவல் குல்கர்னி வீசிய 4வது ஸ்டம்ப் பந்தை ட்ரைவ் ஆட முயன்றார், அது வெளி விளிம்பில் பட்டு தேர்ட் மேனில் பவுண்டரி ஆனது.

கடந்த ஐபிஎல் முதல் சர்வதேச கிரிக்கெட்டிலும் விராட் கோலி லெக் ஸ்பின்னரிடம் ஆட்டமிழப்பது நடந்து வருகிறது, ஆடம் ஸாம்ப்பாவை கோலியினால் சரியாக ஆட முடியாததை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பார்த்தோம், கடந்த ஐபிஎல் தொடரில் ரஷீத் கான் உட்பட லெக் ஸ்பின்னர்களிடம் அவர் ஆட்டமிழந்ததைப் பார்த்தோம்,

அந்த வரிசையில் இன்று ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகத்திறமை வாய்ந்த ஷ்ரேயஸ் கோபால் என்ற லெக் ஸ்பின்னரின் கூக்ளியில் கிளீன் பவுல்டு ஆகியுள்ளார் விராட் கோலி.

மிக அழகாக தூக்கி வீசப்பட்ட கூக்ளி கோலியை அவரது பேவரைட் ட்ரைவ் ஆன கவர் ட்ரைவ் ஆட அழைத்தது, ஆசைக் காட்டியது. கொஞ்சம் மெதுவாக கொஞ்சம் வைடாக விழுந்த பந்தை கோலி ஆசைப்பட்டு கவர் டிரைவுக்குச் சென்றார், பந்து அவரது மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே புகுந்து ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது.

தொடக்கத்தில் இறங்கி நின்று ஆடி பிறகு அடித்துக் கொள்ளலாம் என்ற உத்தியில் ஆடிய கோலி கடைசியில் 25 பந்துகளில் கொஞ்சம் டாட்பால்களையும் விட்டுக் கொடுத்து 23 ரன்களில் வெளியேறி அணியை சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.

ஐபிஎல் 2018 முதல் கோலியின் கூக்ளிக்கு எதிரான ஸ்ட்ரைக் ரேட் 85.7 என்றும் ஆஃப்ஸ்பின்னுக்கு எதிராக 75 என்றும் கூறுகிறது புள்ளிவிவரங்கள், அதனால்தான் கவுதமாஇ கோலிக்கு எதிராக ரஹானே கொடுத்தார் போலும், ஷ்ரேயச் கோபாலையும் பவர் ப்ளே முடிந்து 7வது ஓவரிலேயே கொண்டு வந்தார் ரஹானே.

அவரையடுத்து ஆர்சிபியின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமான ஏ.பி.டிவில்லியர்ஸையும் கோபால் தன் பந்து வீச்சில் தன் கேட்சில் வீழ்த்தினார், டிவில்லியர்ஸ் 13 பந்துகளில் வெளியேற ஆர்சிபி அணியில் பார்த்திவ் படேல் 18 பந்துகளில் 33 ரன்களுடனும் ஆடி வர ஹெட்மையர் மீண்டும் சொதப்பி கோபாலின் கூக்ளியில் எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆகி 1 ரன்னில் வெளியேறினார். ஆர்சிபி 73/3. கோபால் 3வது ஓவரில் 7 ரன்களுக்கு 3 விக்கெட் என்று அசத்தி வருகிறார்.

இந்நிலையில் அணியின் நிலை குறித்து கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார். ”நடப்பு ஐபிஎல் தொடரில் எங்கள் அணி சிறந்த தொடக்கத்தை கொடுக்கவில்லை. இது வருத்தமான நிலை தான். ஆனால் நாங்கள் மீண்டு வருவோம் என நம்பிக்கையுள்ளது.

நாங்கள் மும்பைக்கு எதிராகவும், ராஜஸ்தானுக்கு எதிராகவும் நன்றாக விளையாடினோம். எங்களுக்கு சில தன்னம்பிக்கை தேவைப்படுகிறது. எங்களது அணி வீரர்களுடன் அமர்ந்துபேசி அணிக்கான சில தேவையை குறித்து ஆலோசிக்க வேண்டும். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சில கேட்ச்சுகளை தவறவிட்டோம். பல தவறுகளை செய்ததால் நேற்றைய போட்டியில் தோற்க நேர்ந்தது’’ என்று தெரிவித்துள்ளார்

ராயல் சேலஞ்சர்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.