வாய்ப்பு ரொம்ப கம்மி தான்… இது நடந்தால் மட்டுமே பெங்களூர் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் !!

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 14 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கியது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 60 போட்டிகளுக்கு மேல் நிறைவடைந்துவிட்டது. அடுத்த சில தினங்களில் லீக் போட்டிகள் நிறைவடைய உள்ளது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளன. மற்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி 4வது இடத்திற்கு டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரு அணிகளும் தலா 14 புள்ளிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் டெல்லி 4-வது இடத்திலும், ஆர்சிபி 5-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே உள்ளன. டெல்லி தனது கடைசி லீக்கில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சென்றுவிடலாம். ஒருவேளை தோற்றால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து ப்ளே-ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது.

பெங்களூர் தனது கடைசி லீக்கில் வெற்றி பெற்றாலும்கூட ரன்ரேட் அடிப்படையில் வெளியேற வாய்ப்புள்ளது. எனவே பெங்களூர் அணி 4-வது இடத்தை உறுதி செய்ய வேண்டுமெனில் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி தோல்வியடையவும் வேண்டும். இது நடந்தால் மட்டுமே பெங்களூர் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

தனது அடுத்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள பெங்களூர் அணி, குஜராத் அணியை வீழ்த்தினாலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் டெல்லி அணியை வீழ்த்த முடியாவிட்டால் அது பெங்களூர் அணிக்கு தான் பிரச்சனை.

Mohamed:

This website uses cookies.