புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆர்சிபி ! புதிய முயற்சி ! காரணத்தை கேட்ட ரசிகர்கள் வியப்பு !

புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆர்சிபி ! புதிய முயற்சி ! காரணத்தை கேட்ட ரசிகர்கள் வியப்பு !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 27 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சிஎஸ்கே 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகள் இருக்கிறது. 

இன்று (மே2) இரண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 28வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.இதையடுத்து 7.30 மணிக்கு நடைபெறும் 29வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகிறது.

கடந்த சீசனை விட இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறந்த பார்மில் இருக்கிறது. அணியில் பல மாற்றங்களை செய்து தற்போது பெங்களூர் சக்தி வாய்ந்த அணியாக இருக்கிறது. இதற்கு மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் பட்டேலின் அதிரடி ஆட்டம் தான் முக்கிய காரணம்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால் இந்தியா பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அதில் முக்கியமா ஒன்று என்றால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவியை செய்து வருகிறது.

அந்தவகையில், பெங்களூர் அணியும் தற்போது முன்வந்துள்ளது. தங்களது சிவப்பு ஜெர்சியை புளூ ஜெர்சியாக மாற்றி உள்ளது. இந்த ஜெர்சியில் தான் எதிர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்திருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆர்சிபி வீரர்கள் அனைவரது ஜெர்சியையும் ஏலத்தில் விட்டு அதன் மூலம் வரும் பணத்தை கொரோனா நிதியுதவியை வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் ஆர்சிபி அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.