முகமது சமியின் சிறப்பான பந்துவீச்சுக்கு காரணமே இதுதான் ; முகமது சமியை பாராட்டிய முன்னாள் வீரர் !!

முகமது சமியின் சிறப்பான பந்துவீச்சுக்கு காரணமே இதுதான் ; முகமது சமியை பாராட்டிய முன்னாள் வீரர்..

இந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சு எதிரணியை கதிகலங்க வைத்துவிட்டது என வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயான் பிஷப் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் டெஸ்ட் தொடருக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு இதுவரை 13 போட்டிகளில் 23 விக்கெட்களை வீழ்த்தி அதிகம் விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் பர்பிள் நிற தொப்பியை பெற்றுள்ளார்.

குறிப்பாக கடைசியாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு உறுதுணையாக திகழ்ந்த முகமது சமியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டி வருகிறது.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயான் பிஷப் .,குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிக சிறப்பாக பந்து வீசி வரும் அனுபவ வேகப் பந்து வீச்சாளர் முகமது சமியை வெகுவாக பாராட்டி வருவதோடு, அவருடைய சிறப்பான பந்து வீச்சின் காரணத்தையும் செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயான் பிஷப் தெரிவித்ததாவது.,“முகமது சமி பவர் ப்ளேயில் 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.பவர் ப்ளே ஓவரில் விக்கெட்டை வீழ்த்துவதற்கும் கடைசியில் விக்கெட்டை வீழ்த்துவதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது,புவனேஷ்வர் குமார் நல்ல விளையாடினார், அவர் போட்டியின் கடைசி ஓவரில் நாலு விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆனால் அதற்கும் சமியின் விக்கெட்டிர்க்கும் அதிக வித்தியாசம் உள்ளது, சமி டி.20 தொடரில் டெஸ்ட் தொடரில் வீசும் லைன் மற்றும் லென்த்தில் வீசுகிறார். (இதே யுக்தியை சிராஜும் பயன்படுத்துகிறார். முகமது சிராஜ் பந்தை ஸ்டம்பிர்க்கு நேராக வீசி சிறிய ஸ்விங்மட்டும் செய்கிறார் இதனால் நல்ல பலன் கிடைக்கிறது).முகமது சமி இந்த தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.இவருடைய பந்துவீச்சு எதிரணியின் முதுகுத் தண்டையே உடைத்துவிட்டது .குஜராத் அணி வெற்றி பெறுவதற்கு சமி மிக முக்கியமானவர். நிச்சயம் அவர் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் என முகமது ஷமி குறித்து இயான் பிஷப் தெரிவித்திருந்தார்.

ஹைதரபாத் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.