ரொம்ப ஈசியா ஜெயிச்சிருவாங்க… சென்னை – பெங்களூர் போட்டி இந்த அணி தான் வெற்றி பெரும்; பிரையன் லாரா உறுதி !!

ரொம்ப ஈசியா ஜெயிச்சிருவாங்க… சென்னை – பெங்களூர் போட்டி இந்த அணி தான் வெற்றி பெரும்; பிரையன் லாரா உறுதி

நடப்பு ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் இடையேயான போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி குறித்தான தனது கணிப்பை முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரையன் லாரா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் துவங்கிய 17வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 74 போட்டிகளை கொண்ட இந்த தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது, இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. நான்காவது இடத்தை பிடிக்க சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இன்று (18-5-24) நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் இடையேயான போட்டியே நடப்பு தொடருக்கான ப்ளே ஆஃப் சுற்றின் நான்காவது அணியை தீர்மானிக்கும் என்பதால், இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், நடப்பு ஐபிஎல் தொடர் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் இடையேயான போட்டி குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசி வரும் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான பிரையன் லாரா, சென்னை – பெங்களூர் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பிரையன் லாரா பேசுகையில், “பெங்களூர் அணி இதுவரை சாம்பியன் பட்டம் வென்றது இல்லை என்பதால் மற்ற அனைத்து அணிகளை விடவும் அவர்களுக்கே சாம்பியன் பட்டம் மீதான வெறி அதிகமாக இருக்கும், ஒரு சிறு வாய்ப்பை கூட அவர்கள் வீணடித்துவிட மாட்டார்கள். பெங்களூர் அணி தங்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட மாட்டார்கள் என்றே கருதுகிறேன், பெங்களூர் அணியும் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று அதே உத்வேகத்துடன் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளதால், சென்னை அணி மீதே அழுத்தம் இருக்கும். பெங்களூர் அணியில் டூபிளசிஸ், சிராஜ், விராட் கோலி போன்ற அனுபவமிக்க வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து வருவதும் பெங்களூர் அணியின் பலமாக நான் பார்க்கிறேன். என்னை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் இடையேயான போட்டியில் பெங்களூர் அணியே நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.