ஒருவழியாக டாஸ் போடப்பட்டது… ஆர்சிபி முதலில் பேட்டிங்…வாழ்வா? சாவா போட்டியில் ஆர்சிபி வெல்லுமா? – இன்றைய பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கின்றன என்பதை கீழே காண்போம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் பிளே-ஆப் வாய்ப்பு உறுதியாகவில்லை.

தற்போது பெங்களூரில் நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் வெற்றி தோல்வியை பொறுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு அமையும்.

கட்டாயம் வென்றாக வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் ஆர்சிபி மற்றும் ஏற்கனவே பிளே-ஆப் சென்றுவிட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியில், டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் செய்கிறோம் என அறிவித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி இன்றைய போட்டியில் எந்தவித மாற்றங்களும் செய்யாமல் அதே பிளேயிங் லெவலுடன் களமிறங்குகிறது. ஆர்சிபி அணி ஒரு முக்கிய மாற்றத்தை செய்திருக்கிறது. கர்ண் சர்மா வெளியேற்றப்பட்டு ஹிம்மன்ஷு சர்மா உள்ளே வந்திருக்கிறார்.

இன்று களமிறங்கும் இரு அணிகளின் முதன்மை ப்ளெயிங் லெவன் பட்டியலை பின்வருமாறு காண்போம்.

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

ஷுப்மான் கில், விருத்திமான் சாஹல்(கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேட்ச்), டேவிட் மில்லர், தசுன் ஷனகா, ராகுல் திவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, யாஷ் தயாள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்):

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், மைக்கேல் பிரேஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலே நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுவிடும். அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுவிட்டால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுவிடும்.

Mohamed:

This website uses cookies.