வீடியோ; தேவையே இல்லாமல் அவுட் கொடுத்த அம்பயர்… கடும் கோவத்தில் பேட், ஹெல்மட்டை வீசி எறிந்த மேத்யூ வேட் !!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் ஒரு துவக்க வீரரான சுப்மன் கில் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான விர்திமான் சஹா 31 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

தேவை இல்லாமல் விக்கெட்டை இழந்த விரக்தியில் மேத்யூ வேட் பேட் மற்றும் ஹெல்மெட்டை ஆக்ரோசமாக வீசி எறிந்த வீடியோ;

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேத்யூ வேட் 16 ரன்கள் எடுத்திருந்த போது அம்பயரின் தவறான முடிவால் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த டேவிட் மில்லர் 34 ரன்களும், ராகுல் திவாட்டியா 2 ரன்களிலும் விக்கெட்டை இழந்தாலும், இறுதி வரை களத்தில் இருந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரசீத் கான் 6 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 168 ரன்கள் எடுத்துள்ளது.

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள பெங்களூர் அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 55 ரன்கள் எடுத்துள்ளது.

Mohamed:

This website uses cookies.