பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் மும்பை இரு அணிகளும் மோதுகின்றன.
போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஏனெனில் முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியை தழுவின. இதனால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று புதிய உத்வேகத்தை பெற இரு அணிகளுக்கும் இடையே போராட்டம் கடுமையாக இருக்கும்.
மும்பை அணியில் பும்ரா ஆடுகிறார். அந்த அணிக்கு சற்று கூடுதல் பலமாக இருக்கும். அதேபோல் பெங்களூர் அணியில் கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்கள் மாற்றமில்லாது களமிறங்குகின்றனர். கடந்த போட்டியில் சென்னை அணி இடம் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியிலும் மாற்றம் எதுவும் செய்யாதது அதிர்ச்சியாக உள்ளது.
மும்பை அணி
ரோகித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே, மலிங்கா, பும்ரா
பெங்களூர் அணி
Photo by: Sandeep Shetty / SPORTZPICS / IPL
விராட் கோலி (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், ஏபி டிவில்லியர்ஸ், மொயின் அலி, ஹெர்மயர், துபெ, க்ராந்தோம், சைனி, சஹால், உமேஷ் யாதவ், சிராஜ்
இந்த போட்டியில் மும்பை அணிக்கு வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்க மலிங்கா மற்றும் பும்ரா இணைந்துள்ளது மிகுந்த பலத்தைக் கொடுக்கும். மேலும், பெங்களூரு அணியில் இதற்கு முந்தைய போட்டிகளில் பார்க்கையில் மும்பை அணிக்கு எதிராக டி வில்லியர்ஸ் சிறப்பாக ஆடி உள்ளார். மேலும் அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் செல்ல விராத் கோலியும் சிறப்பாக ஆடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.