“வாத்தி கம்மிங் ஒத்து” மீண்டும் ஆர்சிபி கேப்டனாகிறார் கிங் கோலி… முதலில் பேட்டிங்… பக்கா பிளானுடன் இறங்கும் ஆர்சிபி அணி..பிளேயிங் லெவனில் என்னென்ன செய்துள்ளது? – விபரம் உள்ளே!

ஆர்சிபி அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார் விராட் கோலி இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

மொகாலி மைதானத்தில் நடைபெறும் 27-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பாப் டு பிளசிஸ் இம்பாக்ட் வீரராக விளையாடுவதால், விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்று விளையாடுகிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஷிகர் தவானும் இன்றைய போட்டியில் விளையாடாததால் ஷாம் கர்ரன் கேப்டன் பொறுப்பேற்று இருக்கிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொண்டு சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவியபிறகு, இப்போது மொகாலிக்கு வந்து பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பெற்றது. அப்போதும் ஷாம் கர்ரன் கேப்டன் பொறுப்பில் இருந்தார். இது மற்றுமொரு பலத்தை அந்த அணிக்கு கொடுத்திருக்கிறது.

இரு அணிகளிலும் தற்காலிக கேப்டன்கள் விளையாடுவதால், ஆட்டத்தில் எவ்வாறு சூடு பிடிக்கும்? மேலும் ஆர்சிபி அணி வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்யும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Credits – RCB twitter official

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் பேயின் நிலவரம் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்):

விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சுயாஷ் பிரபுதேசாய், ஹர்ஷல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ்

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

அதர்வா டைடே, மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங் பாட்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

Mohamed:

This website uses cookies.