ஐபிஎல் தொடரின் 49 வது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது இப்போட்டியில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் 7வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.
பெங்களூரு அணி ஏற்கனவே பிளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துவிட்டது. அதனால், இந்த போட்டி சாதாரண லீக் போட்டியாகவே இருக்கும். வெளியேறும் தருவாயில் ஆறுதல் வெற்றிக்காக பார்க்கும்.
ஆனால், ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்தாலும், இன்றைய கிடைக்கும் 2 புள்ளிகள் 4வது அல்லது 5வது இடத்திற்கு எடுத்து செல்லும். பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய ஒரு கூடுதல் வாய்ப்பாக அமையும். கட்டாயம் ராஜஸ்தான் அணி வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 20 போட்டிகளில், பெங்களூரு அணி 8 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளது. 2 போட்டிகளில் முடிவு இல்லாமல் போனது.
சாத்தியமான அணிகள்
பெங்களூரு அணி – பார்த்திவ் படேல் (கீப்பர்), விராட் கோஹ்லி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், ஷிவம் டூபே, ஹெய்ன்ரிக் க்ளாசென், குர்கீரத் சிங் மான், மார்கஸ் ஸ்டோனிஸ், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ் , நவதீப் சைனி, யூசுெந்திரா சாஹல்
ராஜஸ்தான் ராயல்ஸ் – அஜிங்கியா ரஹானே, லியாம் லிவிங்ஸ்டன், சஞ்சூ சாம்சன் (கீீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஆஷ்டன் டர்னர், ரியான் பராக், ஸ்டூவர்ட் பின்னி, ஷிரியாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட்கட், வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்
Photo by Saikat Das /SPORTZPICS for IPL
ஒளிபரப்பு விவரங்கள்
டிவி – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தேர்ந்தெடு HD
லைவ் ஸ்ட்ரீமிங் – ஹாட் ஸ்டார்
போட்டி நேரம் – 20:00 IST