நான் தான் அப்பவே சொன்னேன்ல தம்பி… உன்னால விராட் கோலி மாதிரி ஆகவே முடியாது; பாபர் அசாம் குறித்து பேசிய முன்னாள் வீரர் !!

விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் போல் சிறப்பாக செயல்பட்டு விட்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படு என்று பாபர் அசாமுக்கு அறிவுரை கொடுத்ததாக கம்ரான் தகவல் தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற வரிசையில் இடம் பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஒருநாள் தொடருக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அதேபோன்று டி20 மற்றும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்றுள்ளார்.

மூன்று விதமான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்து, பாகிஸ்தான் அணியை வழிநடத்தி வரும் பாபர் அசாம் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் இறுதி போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பாபர் அசாமின் மோசமான பேட்டிங்கும் ஒரு காரணம் என்று கூறும் அளவிற்கு இவருடைய ஆட்டம் சமீப காலமாக மந்தமாகவே உள்ளது.

2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அறிமுகமான பாபர் அசாம், அன்றிலிருந்து இன்று வரை பாகிஸ்தான் அணியை திறம்பட வழிநடத்தி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக சர்வதேச டி20 போட்டிகளில் 45 போட்டிகளில் வெறும் பதினோரு தோல்வியை மட்டுமே தழுவி 29 வெற்றிகளை பெற்று மகத்தான சாதனை படைத்துள்ள அசாமை உலகின் பல்வேறு திசைகளில் இருக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், பாபர் அசாமிடம் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் போல் செயல்பட்ட பின்பு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேறு என்று அறிவுரை கொடுத்ததாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து கம்ரான் அக்மன் பேசியிருந்ததாவது, “பைசலாபத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் பாபர் அசாம் டாஸ் போடுவதற்காக மைதானத்தில் சென்றபோது நான் அவரிடம் தற்பொழுது கேப்டனாவதற்கு சரியான நேரம் கிடையாது, இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து.. தற்போதைய பாகிஸ்தான் அணியின் பேட்டிங் லைன்-அப் உன்னை நம்பி தான் உள்ளது, விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நட்சத்திர வீரர்களின் தகுதியை அடைந்துவிடு.. அப்பொழுது நீ 35-40 சதங்களை எட்டி இருப்பாய் அப்போது நீ எந்த ஒரு நெருக்கடி இல்லாமல் சிறந்த கேப்டனாக செயல்படலாம் என்று அறிவுரை கொடுத்தேன். ஆனால் அவர் இதுதான் சரியான நேரம் என்று தன்னுடைய முடிவை எடுத்து விட்டார்.மமெளும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அவரிடம் கேப்டன்ஷிப்பை ஏற்றுக் கொள்ளும்படி அறிவுரை கொடுத்துள்ளனர். நான் அவரிடம் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி ரண்களை குவிப்பதற்கான முயற்சியை ஈடுபடு.. அதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். கேப்டனாக பொறுப்பேற்றால் அதன் நெருக்கடி உன்னுடைய பேட்டிங்கை பாதிக்கும் என்று கூறினேன், அது தற்போது நன்றாகவே தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தற்போதைய பாகிஸ்தான் அணியிலிருந்து பாபர் அசாமை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினால் அது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமையும்” என்றும் கம்ரான் அக்மல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.