35 வயதிலேயே ஓய்வுபெற காரணம் என்ன தெரியுமா ? மும்பை இந்தியன்ஸ் அணியில் பார்த்திவ் படேல் வைத்த சரியான குறி !
தோனிக்கு முன்னாள் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமானவர் பார்த்தீவ் பட்டேல். தனது 17 வயதில் 2003ஆம் ஆண்டு சவுரவ் கங்குலியின் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். தற்போது வரை 25 டெஸ்ட் போட்டிகளிலும் 38 ஒருநாள் போட்டிகளிலும் 2 டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். மொத்தமாக சேர்த்து 2000 ரன்கள் எடுத்து இருக்கிறார். பார்த்திவ் படேல் இதனைத் தாண்டி ஐபிஎல் தொடரில் தான் அதிகபட்சமாக விளையாடியிருக்கிறார். 2010ஆம் ஆண்டு சென்னை அணியில், 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு மும்பை அணியில் விளையாடி இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் 391 ரன்கள் குவித்து இருந்தார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய போதும் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. இந்நிலையில் திடீரென தனது 35 வயதிலேயே அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனை தாண்டி உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் அல்லது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் விளையாட மாட்டேன் என்று முற்றிலுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் தான் இதற்கு காரணம் என்னவென்று தற்போது தெரியவந்திருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகக் குழுவில் இணைந்து இருக்கிறார் பார்த்தீவ் பட்டேல். திறமைகளை கண்டறியும் குழுவில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த திறமையை கண்டறியும் குழுவின் மூலம் தான் ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற உள்ளூர் வீரர்கள் இளம் வயதிலேயே கண்டறியப்பட்டு தற்போது மாபெரும் சர்வதேச வீரர்களாக மாற்றப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காகத்தான் பட்டேல் தற்போது தனது 35 வயதிலேயே ஓய்வினை அறிவித்து கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
தற்போதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 11 ஆயிரத்து 240 ரன்கள் எடுத்துள்ளார். பட்டேல் தனது அணியை இரண்டு வருடத்திற்கு முன்னர் கேப்டனாக இருந்து ரஞ்சி கோப்பை தொடரை வெல்ல வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் இவருக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருப்பதால் திறமைகளை கண்டறிவது மிக எளிது. மேலும் கிரிக்கெட் வீரர்களை அறிந்து அவர்களது திறமை கண்டறிவதும் இவருக்கு எளிது என்று மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பொறுப்பை இவருக்கு கொடுத்திருக்கிறது.