எழுதி வச்சுக்கங்க… எதிர்கால இந்திய அணியில் இவர அடிச்சிக்க ஆளே கிடையாது; பயிற்சியாளர் அதிரடி கருத்து !!

எழுதி வச்சுக்கங்க… எதிர்கால இந்திய அணியில் இவர அடிச்சிக்க ஆளே கிடையாது; பயிற்சியாளர் அதிரடி கருத்து

இந்திய அணியின் மிகப்பெரிய வீரராக ரியான் பராக் உருவெடுப்பார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19-வயதிற்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் வட்டத்தில் பேசு பொருளாக திகழ்ந்த இந்திய அணியின் இளம் வீரர் ரியான் பராக், அசாம் மாநிலத்திற்காக உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் ஏழத்தில் ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரியான் பாராக், அந்த வருடம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். ஆனால் இவர் 2020 மற்றும் 2021 ஆகிய ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை, இருந்தபோதும் இவர் மீது நம்பிக்கை வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 3கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு மீண்டும் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இவர் 2022 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பங்கேற்று 183 ரன்களும் பந்துவீச்சில் நான்கு விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

இப்படி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவர் மீது நம்பிக்கை வைத்து 2023 ஐபிஎல் தொடரிலும் தனது அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே போட்டியில் அஸ்ஸாம் அணியை அரை இறுதிச்சுற்றுக்கு வரை கொண்டு செல்ல மிகப்பெரும் உதவியாக இருந்த ரியான் பாராக், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 116 பந்துகளில் 174 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கினார்.

இதன் காரணமாக ரியான் பராக்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான திஷாந்த் யாக்னிக்., ரியான் பராக் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார் என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக பாராட்டை தெரிவித்துள்ளார்.

அதில், நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ரியான் பராக் டி20 தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய வீரராக வருங்காலங்களில் உருவெடுப்பார் என அதில் தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.