விராட் கோலி அனுஷ்கா சர்மா வின் மீது வன்மத்தை கக்கிய சுனில் கவாஸ்கர்! வர்ணனையாளர் குழுவில் இருந்து அவரை நீக்குங்கள்! டுவிட்டரில் கேட்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

 

விராட் கோலி அனுஷ்கா சர்மா வின் மீது வன்மத்தை கக்கிய சுனில் கவாஸ்கர்! வர்ணனையாளர் குழுவில் இருந்து அவரை நீக்குங்கள்! டுவிட்டரில் கேட்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!

 

சமீப காலமாக ஐபிஎல் தொடரில் வர்ணனை என்பது அதன் எல்லையை தாண்டி சொந்த விஷயங்களுக்குள் எல்லாம் தலையிட்டு வருகிறது. இப்படித்தான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் என்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்து கொண்டிருந்த அவர் அவ்வப்போது சக வர்ணனையாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி கொண்டிருந்தார். மேலும் ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்து விட்டு குறிப்பிட்ட ஒரு அணிக்கு மட்டும் சப்போர்ட் செய்து பேசிக்கொண்டே இருப்பார்

 அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட வந்துவிட்டால் அந்த அணிக்கு மட்டுமே சப்போர்ட் செய்வார் எதிரணி வீரர்களை தரம் குறைந்தும் பேசி வந்தவர். ஒரு கட்டத்தில் இவரது அனாகரிகம் உச்சக்கட்டத்திற்கு சென்று உலக கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜாவை துநபியூ துக்கடா வீரர் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தற்போதும் கூட அம்பத்தி ராயுடு பியூஸ் சாவ்லா போன்ற வீரர்களை தரம் குறைந்த வீரர்கள் என்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டு மன்னிப்பு கோரியும் மீண்டும் சேர்க்கப்படாமல் தனியாக விடப்பட்டுள்ளார்.

 இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஜாம்பவான் வீரர் என்று பாராட்டப்படும் சுனில் கவாஸ்கரின் என்ன ஓட்டமும் இப்படித்தான் உள்ளது அவரின் மனதிலும் இப்படித்தான் அழுக்குகள் படிந்து இருக்கிறது நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக விராட் கோலி பெரிதாக ரன் அடிக்க வில்லை. இது இயல்பாக நடக்கும் ஒன்று தான் இதனை வைத்து தனது மனதில் இருக்கும் அழுக்கு படிந்த வன்மத்தை வெளியே கொண்டு வந்துள்ள சுனில் கவாஸ்கர், விராட் கோலி 5 பந்து ஒரு ரன் அடித்ததை வைத்து லாக்டவுன் நேரத்தில் அனுஷ்கா சர்மாவுடன் பிராக்டிஸ் செய்துக் கொண்டிருந்தார் விராட் கோலி என்று பேசிவிட்டு வன்மமாக சிரித்தார்

 இதனால் கடுப்பான விராட் கோலி ரசிகர்கள் இப்படி ஒரு அனாகரிகமான மனிதனை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இவரை வெகு சீக்கிரமாக வர்ணனையாளர் குழுவில் இருந்து வெளியேற்றுங்கள் என்று டுவிட்டரில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர் ஹர்திக் பாண்டியா விற்கு ஒரு நீதி சுனில் கவாஸ்கர் ஒரு நீதியா என்பது போலும் ட்விட்டரில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

 

 

 

 

 

Mohamed:

This website uses cookies.