ஐக்கிய அரபு நாடுகள் நடத்தும் டி20 லீக் போட்டிகளில் ஏபி டி வில்லியர்ஸ் கலந்துகொள்ளப் போவதாக தெரியவந்துள்ளது. இவர் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், லீக் போட்டிகளில் ஆடுவார் என்பதை கூறியிருந்தார்.
ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டு விடுமுறையை குடும்பத்தினரோடு செலவழித்து வருகிறார். ஐபில் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும், உள்நாட்டு அணியான டைட்டன்ஸ் அணியிலும் ஆடிவருகிறார்.
இவர் தற்போது ஐக்கிய அரபு நாடுகள் நடத்தும் டி20 போட்டிகளில் ஆடப்போவதாக லீக் போட்டிகளை நடத்தும் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்க்கான லோகோ அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலும் ஏபி டி வில்லியர்ஸ் கலந்து கொள்கிறார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ட்விட்டர்ஹேண்டில், “கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரை உங்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகின்றோம்” என்று தெரிவித்தது. இவர் மிக விரைவான 50, 100 மற்றும் 150 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்து சாதனை படைத்துள்ளார். அவர் யார் என்பதை யூகிக்க முடியுமா? “என்று ட்வீட் போட்டு கேள்வி கேட்டிருந்தது. ரசிகர்கள் தற்போது உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர். அதை பற்றி மேலும் விவரங்கள் இல்லை மற்றும் ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் T20 லீக் தொடரின் முதல் சீசன் டிசம்பர் 19 தொடங்கி ஜனவரி 11 வரை விளையாடப்படும். அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானங்களில் 24 போட்டிகள் நடைபெறும்.
ஐந்து அணிகள் ஒவ்வொன்றும் 16 வீரர்களை கொண்டிருக்கும், அதில் ஆறு சர்வதேச நட்சத்திர வீரர்கள், இரண்டு வளர்ந்து வரும் வீரர்கள் ஐ.சி.சி. முழு உறுப்பினர் நாடுகளில் இருந்தும், மூன்று ICC இணை உறுப்பினர்கள் நாடுகளில் இருந்தும், இரண்டு ஜூனியர்ஸ் மற்றும் மூன்று யூஏஈ கிரிக்கெட் வீரர்கள் என்ற அடிப்படையில் இடம்பெறுவர்.