அதிர்ச்சி செய்தி! முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இவர்களால் ஆட முடியாது! இந்திய கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் ஆவேஸ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் விளையாட முடியாத சூழ்நிலை உருவானது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக சுப்மன் கில் இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் வாசிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஸ் கான் இவர்கள் இருவரும் காயம் காரணமாக வெளியேறினார்கள். எனவே இந்த மூவருக்கும் சிறந்த மாற்று வீரரை இந்திய நிர்வாகம் தேடி வந்தது.

இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்திவி ஷா இவர்கள் இருவரும் மிக சிறப்பாக விளையாடியது அடுத்து இவர்களுக்கு டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பினை வழங்கவுள்ளதாக இந்திய அணி சமீபத்தில் கூறியிருந்தது. இலங்கைக்கு எதிராக டி20 தொடர் நடந்து முடிந்தவுடன் இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்குச் சென்று இந்திய அணியுடன் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை

ஆனால் தற்பொழுது இவர்கள் இருவரும் இலங்கையில் தனிமை படுத்த பட்டு இருக்கின்றனர். தற்பொழுது இவர்கள் பத்து நாட்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் இங்கிலாந்து செல்ல வேண்டும். பின்னர் அங்கேயும் மீண்டும் பத்து நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும். தனிமை நாட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற காரணத்தினால் ஏறக்குறைய இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் இவர்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாது.

தனிமை நாட்கள் முடிந்த பின்னர் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இவர்களால் பங்கெடுத்து விளையாட முடியும். எனவே இவர்கள் இருவரும் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் பங்கெடுத்து விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள். இந்த முடிவு இந்திய அணிக்கு சரியாக படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேறு வீரர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

தற்போது வந்த தகவலின் படி கூடிய விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியகுமார் யாதவ் மற்றும் பிருத்வி ஷா இவர்கள் இருவரும் மூன்று டெஸ்ட் போட்டியில் பங்கு எடுத்துக் கொள்ள முடியாது என்கிற அடிப்படையில், தற்பொழுது இவர்களுக்கு மாற்று வீரராக வேறு வீரர்களைத் தேர்ந்தெடுத்து விளையாட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடிய விரைவில் அந்த வீரர்கள் யார் என அறி விக்கப்படும் என்கிற செய்தியும் தற்போது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.