இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிண்டு ஹசரங்கவிற்காக போட்டி போடும் 4 ஐபிஎல் அணிகள்!

இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டி20 போட்டிகளில் குறிப்பாக பேட்டிங் பவுலிங் என இரண்டு விதத்திலும் மிக சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை வணிண்டு ஹசரங்கா நிரூபித்தார். அதேபோல தற்பொழுது நடைபெற்று முடிந்துள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவருடைய பௌலிங் அவரேஜ் வெறும் 9.57 மற்றும் பவுலிங் எக்கானமி 5.58 ஆகும். அதன் காரணமாக இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மேலும் சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட சர்வதேச டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் அவர் தன்னுடைய இடத்தை பதிவு செய்துள்ளார். தற்போது இந்தியாவுக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தின் மூலம் புள்ளி பட்டியலில் முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் வரும் இவரை 4 ஐபிஎல் அணிகள் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் வாங்கி விளையாட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் இல்லாத காரணத்தினால் இந்த முடிவு

செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கப்பட இருக்கும் ஐபிஎல் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி நடந்த முடிக்கப்பட உள்ளது. இங்கிலாந்து அணி வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என்று முன்னரே தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஐபிஎல் அணிகள் தற்போது இங்கிலாந்து அணி வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்கிற அடிப்படையில் இவரை 4 ஐபிஎல் அணிகள் குறிவைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நான்கு அணிகள் எந்த அணிகள் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் கூடிய விரைவில் எந்த அணி இவரை வாங்கி விளையாடப் போகிறது என்கிற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

முத்தையா முரளிதரன் நம்பிக்கை

இதற்கு முன்பே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் நிச்சயமாக இவரை ஏதேனும் ஒரு அணி வாங்கும் என்று கூறியிருந்தார். அடுத்த ஆண்டு 2 புதிய அணிகள் வர இருப்பதால் நிச்சயமாக ஏதேனும் ஒரு அணி இவரை குறிவைக்கும் என்று முத்தையா முரளிதரன் இதற்கு முன்பு விளக்கம் அளித்திருந்தார்.

ஒரு அணியில் உள்ளூர் சுழற்பந்து வீச்சாளர் இருக்கும் பட்சத்தில் இவரால் பங்கெடுத்து விளையாட முடியாது. ஆனால் வெளியூர் சுழற் பந்துவீச்சாளர் தேவை என்கிற அடிப்படையில் நிச்சயமாக இவரை ஏதேனும் ஒரு அணி குறிவைத்து வாங்க நிறைய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியிருந்தார். அவர் கூறியது போல இந்த ஆண்டே ஏதேனும் ஒரு ஐபிஎல் அணியில் அவர் விளையாட போகிறார். தற்பொழுது முத்தையா முரளிதரன் முன்னரே கூறியது தற்போது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.