அடுத்த கேப்டன் இவர் தான்… இளம் வீரருக்கு குறி வைத்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி !!

டெல்லி கேப்பிடல் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சில நாட்களில் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தனது அணியில் தேர்ந்தெடுக்கலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது, குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இடம் பெற்றிருப்பதால் ஐபிஎல் தொடர் மட்டும்மில்லாமல், ஐபிஎல் தொடர் ஏலமும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணியின் கேப்டனாக நியமிப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மிக சிறந்த முறையில் அணியை வழிநடத்தி டெல்லி அணியை இறுதி சுற்று வரை கொண்டு சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டெல்லி அணி தோல்வியை தழுவியது இருந்தபோதும் ஸ்ரேயாஸ் ஐயர் மிக சிறந்த முறையில் அணியை வழி நடத்தினார் என்று வெகுவாகப் பாராட்டப்பட்டார்.

பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பலத்த காயம் ஏற்பட்டதால் 2021 ஐபிஎல் தொடருக்கான முதல் பாதியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது, இதன் காரணமாக டெல்லி அணியின் கேப்டனாக அந்த அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். பின் காயத்திலிருந்து பரி பூரண குணமாகி 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் மீண்டும் டெல்லி அணிக்கு என்றி ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கேப்டன் பதவியை ரிஷப் பண்ட் சரியாக பயன்படுத்துகிறார் என்று அவரையே கேப்டனாக தொடரும்படி டெல்லி அணி தெரிவித்துவிட்டது.

மேலும் அதனை தொடர்ந்து 2022 ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிடல் அணி ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணியில் தக்க வைக்க வில்லை, இதனால் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் புதிதாக நியமிக்கப்படும் இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை தனது அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Mohamed:

This website uses cookies.