இந்த வீரர் 2022 ஐபிஎல் தொடரில் அணியில் இருப்பது 10% தான் வாய்ப்புள்ளது; மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரமுகர் பேட்டி!!

2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைத்துக் கொள்ளப்படுவது சந்தேகமான ஒன்றுதான் என்று அந்த அணியின் நம்பகமான நபர்கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பலமுறை உறுதுணையாக திகழ்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பண்டியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றிலும் மிக சிறந்த முறையில் விளையாடக் கூடியவர்.

ஆனால் ஹர்திக் பாண்டியா முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, மிகப்பெரிய ஓய்வில் இருந்தார். அவருடைய உடல் நலம் முன்னேற கால அவகாசம் நிறைய தேவைப்பட்டது,உடல்நிலை சரியான பின்னர் மீண்டும் ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான லிமிட்டட் ஓவர் போட்டிகளில் இடம்பெற்று விளையாட தொடங்கினார்.

பேட்டிங்கில் அவர் பழையபடி விளையாட ஆரம்பித்தாலும், பந்துவீச்சில் இன்னும் அவர் முழுமையாக தயாராகவில்லை. 2021 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் க அவர் பேட்டிங் மட்டுமே செய்தார். இருந்தபோதும் உலக கோப்பை தொடருக்கு முன் இவர் மீண்டும் பழைய படி குணமாகி பந்துவீச தயாராகி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஹர்திக் பாண்டியாவின் உடல்நலம் பழையபடி சீராக வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் தேவைப்படும் என்று கூறினார்.

இதன் காரணமாக உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஹார்திக் பாண்டியா பினிசராக பயன்படுத்தியது, இருந்தபோதும் அதிலும் எதிர்பார்த்த அளவிற்கு ஹர்திக் பாண்டியா செயல்படவில்லை இதன்காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக விளையாடுவது சந்தேகம் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஹர்திக் பாண்டியா குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தக்கவைத்துக்கொள்வது 10% தான் சாத்தியம் உள்ளது, ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் தக்கவைத்துக்கொள்ளபடுவார் என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.