மீண்டும் யோ-யோ டெஸ்ட் தலைவலி! பாஸ் மார்க்கை 16.1ல் இருந்து கூட்டிய ரவி சாஸ்திரி!!

ரவிசாஸ்திரி யோ யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண்ணை அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்தியா தோல்வியின்றி வெற்றியோடு முடித்திருப்பது இதுவரை நடக்காதது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியது. ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்தியா தொடரை சிறப்பாக முடித்தது.

சிறப்பாக விளையாடிய இந்திய அணியை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், இதுபோன்று இதற்கு முன் நடந்தது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணில் வீழ்த்தியுள்ளோம். இதுபோன்று இதற்கு முன்பு நடந்ததில்லை என்று நினைக்கிறேன்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. கடந்த காலங்களில் இப்படி நடந்ததாக நான் நினைக்கவில்லை. வரும் காலத்தில் இதுபோன்று எளிதாக நடக்கும் என்றும் நினைக்கவில்லை’’ என்றார்.

 

இந்நிலையில் ரவிசாஸ்திரி யோ யோ டெஸ்ட் தேர்ச்சி மதிப்பெண்ணை அதிகரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது முன்னதாக 16.1 மதிப்பெண் எடுத்தால் இதில் தேர்ச்சி பெற்று இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்று இருந்தது.
இந்நிலையில் புதிதாக மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரவி சாஸ்திரி அந்த மதிப்பெண்ணை பதிலாக கூட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

மேலும்,

2021 டி20 உலகக்கோப்பை தொடர் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மும்பை மிரர் பத்திரிகை தெரிவிக்கிறது.

மும்பை மிரர் செய்திகளின் படி தற்போது ரூ.8 கோடி பக்கம் ஆண்டு வருமானம் பெறும் ரவிசாஸ்திரியின் சம்பளம் ரூ.9.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதே போல் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரது சம்பளம் ரூ.3.5 கோடியாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோரின் ஆண்டு சம்பளம் ரூ.2.5 கோடி முதல் ரூ. 3 கோடி வரை இருக்கலாம். இவை செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.