விராட் கோஹ்லியின் இடத்தில், இந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை நியமிக்க திட்டம் தீட்டிவரும் ஆர்சிபி!! அது மேக்ஸ்வெல் இல்லை..

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக மனிஷ் பாண்டேவை நியமிக்க, அதன் அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 2013ம் ஆண்டு முதல் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்தவர் விராட் கோலி. இவர் திடீரென 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலிருந்து கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாகவும், ஆனால் தொடர்ந்து பெங்களூரு அணியில் நீடிப்பதாகவும் தெரிவித்தார். பெங்களூரு அணி 2022 ஐபிஎல் தொடருக்கு விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் சிராஜ் ஆகிய மூவரையும் தக்க வைத்திருக்கிறது.

புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சில மாற்றங்களும் அணியின் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு இனி யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அணியில் இருந்து வருகிறது. ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார். ஆகையால், அடுத்த மூத்த வீரராக மேக்ஸ்வெல் இருப்பதால் அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்க போவதில்லை என தெளிவாக கூறிவிட்டது.

இதற்கிடையில் மனிஷ் பாண்டே ஆர்சிபி அணிக்கு அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடி வந்தார். இம்முறை மனிஷ் பாண்டேவை ஹைதராபாத் அணி தக்கவைக்கவில்லை. ஏலத்தில் இவரை எடுப்பதற்கு ஆர்சிபி அணி மும்முரம் காட்டி வருகிறது. கர்நாடக அணியை வழிநடத்தி வரும் மனிஷ் பாண்டே சையது முஸ்தக் அலி தொடரின் இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்றார். சமீபத்தில் கேப்டன் பொறுப்பில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் மனிஷ் பாண்டே, நிச்சயம் ஆர்சிபி அணிக்கு சரியாக இருப்பார் என அதன் நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

கடந்த சீசனில் மனிஷ் பாண்டே ஹைதராபாத் அணிக்கு, வெறும் 8 போட்டிகள் மட்டுமே விளையாடினார். அதில் 292 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார்.

Mohamed:

This website uses cookies.