ஐபிஎல்-2019 தொடர் நடக்குமா?? குழப்பத்தில் பிசிசிஐ!! காரணம் என்ன தெரியுமா?

இந்த வருட ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால், அந்த பெருமூச்சு விட்டு முடியும் முன்னரே அடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளது பிசிசிஐ. கடந்த 11 வருடங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடர் 2019ஆம் வருடம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் 2019ஆம் வருடம் இங்கிலாந்து நாட்டில் உலகக்கோப்பை நடக்க உள்ளது. இந்தமுறை மே மாதம் 30ம் தேதி துவங்குகிறது. ஆனால் உலகின் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் ஐபில் தொடரில் ஆடிக்கொண்டிருப்பர், அதேநேரத்தில் உலகக்கொப்பை தொடர் துவங்கும் முன் வீரர்களுக்கு குறைந்தது 15 நாட்களாவது ஓய்வு நேரம் வேண்டும். 

இதுவரை ஏப்ரல் முதல் இரண்டாம் வாரம் துவங்கி வந்த ஐபில் உலகக்கோப்பை பயிற்சியை முன்கருதி வரும் வருட ஐபிலை மார்ச் 30 க்கும் முன்னதாகவே துவங்க உள்ளதாக தெரிகிறது. இதுஒருபுறம் இருக்க 2019ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் அதன் பிரச்சாரங்களும் துவங்கவிருக்கிறது.

தேர்தலின் காரணமாக 2019ம் ஆண்டு ஐபில் வேறு நாட்டிற்க்கு மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. கடந்த 2009 தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஷிப் தொடரில் நடைபெற்ற அன்னிய செலவானி முறைகெட்டில் ஐபில் நிர்வாகதிற்க்கும் பிசிசிஐ’க்கும் அபராதம் விதித்தது அமலாக்கதுறை. 

அமலாக்கத்துறையின் நடவடிக்கை 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி, மற்றும் பிசிசிஐ தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது பாய்ந்தது. இருவரும் சேர்த்து 124 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து 324 கோடி ரூபாய் அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவிற்கு கொண்டு வந்ததன் காரணமாக இதை அபராதம் விதிக்கப்பட்டது. இந்த காரணத்தினால் அதுர்ஹா வருட ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடந்தால் மேலும் சில பிரச்சனைகள் வரலாம் என அரசு தீவிரமாக கண்காணிக்கலாம்.

 

இது போன்ற பலவேறு காரணத்தினால் அடுத்த வருட ஐபிஎல் தொடர் நடப்பதில் பல சிக்கல்கள் உள்ளது. இந்தியாவில் நடத்தினால், பொதுத்தேர்தல் பிரச்சனை உள்ளது. மேலும் , அப்படியே வெளிநாட்டில் நடத்தினாலும் முன்னதாகவே நடத்த வேண்டும். ஏனெனில் உலகக்கோப்பை தொடர் மே.30ல் துவங்க உள்ளது.

வீரர்கள் சோர்வடையா வண்ணம் இருக்க வேண்டும். அதனால் ஏப்ரல் இறுதிக்குள் ஐபிஎல் தொடர் முடிக்கப்பட வேண்டும். இது போன்ற பல பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படவோ, அல்லது மாற்றியமைக்கப்படவோ அதிக வாய்ப்புகள் உள்ளது .

 

Editor:

This website uses cookies.