மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஓய்வு கொடுங்கள் : மெக்ராத்

மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஓய்வு கொடுங்கள் : மெக்ராத்

ஆஷஷ் தொடரின் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை 4ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முட்செல் ஸ்டார்க்கை களம் இறக்க வேண்டாம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மெக்ராத் கூறியுள்ளார்.

ஆஷஷ் தொடரின் முதல் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடிய மிட்செல் ஸ்டார்ட் நான்காவது போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது 5ஆவது போட்டிக்காக மிட்செல் ஸ்டார்க் பயிற்சி செய்து வருகிறார். அவர் பயிற்சி செய்யும் போது எந்த ஒரு இடைஞ்சள்களும் இல்லாமல் பயிற்சி செய்து வருகிறார்.

Mitchell Starc struck immediately with the new ball, Australia v England, 2nd Test, Adelaide, December 6, 2017

இதனை பார்த்த முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் க்ளென் மெக்ராத் அவரை பற்றிய கருத்தினை கூறியுள்ளார். அதாவது ஆஷஷ் தொடருக்கு ஒயின் மிக முக்கியமான தென்னாப்பிரிக்க தொடர் வருகிறது. இந்த தொடரில் ஸ்டார்க் ஒரு மிக முக்கியமான பந்து வீச்சாளரகா இருப்பார். இதனால் 100% உடல் தகுதியில் அவர் இல்லை எனில் அவரை 5ஆவது ஆஷஷ் டெஸ்ட் போட்டடியில் களம் இறக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

தற்போது வரை ஆஷ்ஷ் தொடரில் 19 விக்கர்ட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார். இதனால் அவர் ஒரு நல்ல பார்மில் தான் உளளார் என நம் அனைவருக்கும் தெரிகிறது.நாம் ஏற்கனவே ஆஷஷ் தொடரை வென்று விட்டோம். இதனால் அவரை 5ஆவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க வைப்பது என்பது தேவையற்றது. அப்படி விளையாட வைக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் காயம் ஆனால் தென்னாப்பிரிக்க தொடரில் நம் அணிக்கு பின்னடைவு ஏற்படும் இதனால்  இறுதி டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு   கொடுக்க வேண்டும்

எனவும் கூறியுள்ளார் க்ளென்.மெக்ராத்

Editor:

This website uses cookies.