இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தோனி. சிறிய நகரத்திலிருந்த ஒரு சிறுவன் உயர்ந்து வந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகி பல சாதனைகளை படைத்ததற்கு சொந்தக்காரரும் இவரே. ஒருநாள் பிழைப்பிற்க்கே கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்து இன்று தனக்கென தனி அங்கீகாரம் அமைத்துக்கொண்ட கேப்டன் கூல் சொத்து மதிப்பு,சம்பளம் மற்றும் இதர வருமானங்களை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
தோனி 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். வங்கதேசத்திற்கு எதிராக ஆடிய போட்டியில் முட்டை ரன்கள் எடுத்ததால் அவரை மறக்க பலரும் முயற்சி செய்தார்கள். அறிமுக தொடர் எப்படி இருந்தது என்பதைப் பற்றி எண்ணிக்கூட பார்க்கக்கூடாத அளவிற்கு ஒரு மோசமான தொடராக அவருக்கு அமைந்தது. ஆனால் ராஞ்சியில் இருந்து வந்த சிறுவன், ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் செயல்பட்டு மிக அழகான திரைக்கதைகளில் ஒன்றை எழுதுவார் என அன்று எவரும் அறிந்திருக்கவில்லை.
தனது 5 வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக தன்னை நிலைநிறுத்தினார். 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக டி20 உலகக்கோப்பைக்கு இளம் வயதினரைத் அழைத்து சென்றபோது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகாலப் பகுதியானது மிகவும் மறக்கமுடியாத தருணம்.
அதன் பிறகு ஒருநாள் போட்டிக்கு விரைவாக கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார், மற்றவை அனைத்தும் வரலாற்றில் இடம்பெற்றவை. 2011 உலகக்கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பை.
2009ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் ஆன சில காலகட்டத்திலேயே டெஸ்ட் அரங்கில், இந்திய அணி தரவரிசையில் முதலிடம் பெற்று சாதனை படைத்ததற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரும் இவரே.
ஒரு பேட்ஸ்மேனாக தோனி 500 சர்வதேச போட்டிகளில் 15,000 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய பிரீமியர் லீகில் அவரது சாதனைகள் சர்வதேச அளவிற்கு சற்றும் குறைந்தது அல்ல. மூன்று முறை ஐபில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது கேப்டன் ஆவார். குறிப்பாக இரண்டு வருட தடைக்கு பின் மீண்டு வந்த அணிக்கு தலைமை பொறுப்பேற்று கோப்பையை வென்று தந்திருக்கிறார்.
அவரது சாதனைகளைப் பார்த்து, அவர் இந்த தலைமுறையின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது. அவரது இந்த அசாத்திய கேப்டன் பொறுப்பிற்கும் பேட்டிங் மற்றும் கீப்பிங் செயல்திறனுக்கும், அவர் போட்டியில் கட்டணம், தக்கவைப்பு-கட்டணம், ஒப்புதல் மற்றும் பிற வரவுகள் என பெரிய அளவிற்கு பணம் ரீதியாகவும் வெற்றிகள் குவித்திருக்கிறார்.
விளம்பரங்களில் பிரதிபலித்த முன்னணி நிறுவனங்களின் பட்டியல்கள்: அசோக் லேலண்ட், மெக்டவ்லின் சோடா, பிக் பஜார், எக்ஸைட் பேட்டரி, டி.வி.எஸ் மோட்டார்ஸ், சோனி ப்ராவியா, சொனடா வாட்ச்ஸ், அன்ட்ரொயிட், டாபர் சியாவன் ப்ராஷ், லேஸ் வாஃபர்ஸ், லாஃபர்ஜர் வாடிக்கையாளர் சேவை மற்றும் மேக்ஸ்க்ஸ் மொபைல்.
தோனி இந்திய சிமெண்ட்ஸில் துணைத் தலைவர் (மார்க்கெட்டிங்) பொறுப்பில் உள்ளார். முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் என். ஸ்ரீனிவாசன் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். தோனி பல விளையாட்டு உரிமையாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
ராஞ்சி சார்ந்த ஹாக்கி கிளப் அணியான ராஞ்சி ரேஸ் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப் அணியான மஹி ரேசிங் டீம் இந்தியா ஆகியவற்றிற்கும் மற்றும் கால்பந்து கிளப் சென்னையின் FC ஆகிய அணிகளின் இணை உரிமையாளராக உள்ளார்.
தற்போது, டோனி நிகர மதிப்பு சுமார் $ 111 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில், உலகின் மிக உயர்ந்த 100 சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் பட்டியலில் டோனி 23 வது இடத்தைப் பிடித்தார். அந்த நேரத்தில், அவரது வருடாந்திர வருவாய் அமெரிக்க டாலர் மதிப்பில் 31 மில்லியனாக இருந்தது.
2017 ஆம் ஆண்டில் விராட் கோஹ்லி 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்தார், அதே சமயம் தோனி சற்று பின்னுக்கு தள்ளப்பட்டார்.