பீல்டிங்கில் கடுமையாக சொதப்பியதுதான் பெங்களூரு தோல்விக்கு காரணம்!

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி பீல்டிங்கில் கடுமையாக சொதப்பியதன் காரணமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது இதுவரை பெங்களூர் அணி 30 கேட்சுகளில் 17 கேட்சுகளை கைவிட்டுள்ளது இதில் அந்த அணிக்கு பெரும் தோல்விக்கான காரணம் ஆகும்.

பிரிமியர் தொடரில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியின் சோகம் தொடர்கிறது. தொடர்ந்து 6வது தோல்வியை பதிவு செய்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து கைகொடுக்க டில்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், 12வது பிரிமியர் தொடர் நடக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பெங்களூரு அணிக்கு பார்த்திவ் படேல் (9) ஏமாற்றினார். டிவிலியர்ஸ் (17), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (15) நிலைக்கவில்லை. பின் கோஹ்லியுடன் இணைந்த மொயீன் அலி பொறுப்பாக ரன் சேர்த்தார். அக்சர் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மொயீன், இஷாந்த் வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்த போது லமிச்சானே பந்தில் மொயீன் (32) ஆட்டமிழந்தார். மறுமுனையில் அசத்திய கோஹ்லி, லமிச்சானே வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்தார்.

ரபாடா அசத்தல்: ரபாடா வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் கோஹ்லி (41) அவுட்டானார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அக்ஸ்தீப் நாத் (19), 3வது பந்தில் வெளியேறினார். தொடர்ந்து அசத்திய ரபாடா, கடைசி பந்தில் பவான் நேகியை (0) ‘பெவிலியனுக்கு’ அனுப்பினார். முகமது சிராஜ் (1) ஏமாற்றினார்.

பெங்களூரு அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 149 ரன்கள் எடுத்தது. டிம் சவுத்தீ (9), யுவேந்திர சகால் (1) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் ரபாடா 4, மோரிஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டிம் சவுத்தீ வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் ஷிகர் தவான் ‘டக்–அவுட்’ ஆனார். மற்றொரு துவக்க வீரர் பிரித்வி ஷா, சவுத்தீ வீசிய 3வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்த போது பவான் நேகி ‘சுழலில்’ பிரித்வி (28) சிக்கினார்.

நேகி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கோலின் இங்ராம் (22), மொயீன் அலி ‘சுழலில்’ சிக்கினார். பொறுப்பாக ஆடிய ஸ்ரேயாஸ், 37 பந்தில் அரைசதமடித்தார். சகால் பந்தில் சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ் (67), நவ்தீப் சைனியிடம் சரணடைந்தார். ரிஷாப் பன்ட், 18 ரன் எடுத்தார். சிராஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அக்சர் படேல் வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 18.5 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அக்சர் படேல் (4), ராகுல் டிவேட்யா (1) அவுட்டாகாமல் இருந்தனர்

 

பிரிமியர் தொடரில், தொடர்ச்சியாக முதல் 6 போட்டிகளில் தோல்வியை தழுவிய 2வது அணியானது பெங்களூரு. இதற்கு முன், 2013ல் டில்லி அணி, தனது முதல் 6 போட்டியில் தோல்வியடைந்தது. இந்த சீசனில் (2013) வெறும் 3 வெற்றியை மட்டும் பதிவு செய்த டில்லி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.

* டெக்கான் (2012), மும்பை (2014) அணிகள் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்தன. தவிர மும்பை அணி 2 முறை (2008, 2015) தலா 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது.

Sathish Kumar:

This website uses cookies.