ரிஷ்ப் பன்ட்டிற்கு பதில் தினேஷ் கார்த்தியை தேர்வு செய்தது விராட் கோலி!

ADELAIDE, AUSTRALIA - JANUARY 15: (L-R) Dinesh Karthik of India celebrates with MS Dhoni of India after deferating Australia during game two of the One Day International series between Australia and India at Adelaide Oval on January 15, 2019 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz/Getty Images)

ரிஷ்ப் பன்ட்டிற்கு பதில் தினேஷ் கார்த்தியை தேர்வு செய்தது விராட் கோலிதான் என செய்திகள் வந்துள்ளது.

நான் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், தோனியைப் பொறுத்தவரை நான் ஒரு முதலுதவிப்பெட்டிதான். அவர் காயத்தால் அணியில் இல்லாத நிலையில்தான் அணிக்குள் நான் செல்ல முடியும் என்று உருக்கமாகத் தெரிவித்தார் தினேஷ் கார்த்திக்.

இங்கிலாந்தில் மே மாத இறுதியில் நடைபெறும் உலகக்கோப்பைப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ கடந்த 2 நாட்களுக்கு முன் அறிவித்தது.

தோனி இந்திய அணிக்குள் அறிமுகமாவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அணிக்குள் அறிமுகமான தினேஷ் கார்த்திக், 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குபின் ஏனோ அதன்பின் நடந்த இரு உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை.

கிடைத்த வாயப்புகளை சிறப்பாக பயன்படுத்திய தோனி, அடுத்தடுத்து உயர்ந்து அணியின் கேப்டனாக உயர்ந்தார், அவர் தலைமையில் இரு உலகக்கோப்பையை இந்திய வென்றது.

அதேபோல, இந்திய அணியிலும் தோனி இருக்கும்வரை மாற்று விக்கெட் கீப்பர் குறித்து யாரும் தேர்வு செய்யப்படாத சூழல்தான் நிலவி வந்தது. தோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றபின் அவரின் இடத்தை விருதிமான் சாஹா நிரப்பத் தொடங்கினார், அவ்வப்போது மட்டுமே தினேஷ் கார்த்திக் அணிக்கு வந்து சென்றார்.

இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப்பின் 2017-ம் ஆண்டு மீண்டும் ஒருநாள் அணிக்குள் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக், வரும் மே மாதம் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனாலும், தோனிக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளாரேத் தவிர முழுநேர விக்கெட் கீப்பராக இடம் பெறவில்லை

 

2017-ம் ஆண்டு இந்திய அணியில் நான் மீண்டும் இடம் பெற்றபின், இப்போது, உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பயணத்தில் நான் இடம் பெற்றுள்ளேன். உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளதால் அணிக்காக ஏதேனும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

என்னிடம் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் பேசினார். அப்போது, எனக்கும், ரிஷப் பந்துக்கும் சரிசமமான வாய்ப்புகள் தரப்படும் என்றார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாத் தொடரில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இந்தியாவில் நடக்கும் ஆஸ்திரேலியத் தொடரில் ரிஷப்பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெளிவாகக் கூறினார். இந்த தெளிவான விளக்கத்தை நான் வரவேற்றேன், மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், உலகக்கோப்பைப் போட்டியில் நான் இந்திய அணியில் இடம்பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தோனிக்கு நான் மாற்றுதான். தனிப்பட்ட முறையில் எனக்கு விக்கெட் கீப்பிங் பணி கொடுத்தால் அதை சிறப்பாகச் செய்வேன்.

தோனியைப் பொறுத்தவரை நான் ஒரு சிறிய முதலுதவிப் பெட்டியாகவே அணியுடன் உலகக் கோப்பைப் போட்டிக்கு பயணிக்கிறேன். தோனிக்கு காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் மட்டுமே நான் அணியில் இடம் பெற முடியுமேத் தவிர மற்றபடி இல்லை.

என்னால் 4-ம் இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாட முடியும். ஐபிஎல் போட்டிக்குபின், நான் தினமும் பயிற்சி எடுத்து நான் முழுமையாக பேட்ஸ்மேன் என்பதை முன்னர் நிரூபித்ததுபோல் செய்வேன்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

Sathish Kumar:

This website uses cookies.