இந்த வருட ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் அந்த நாட்டில் செய்யப்பட்டு வருகிறது. துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் இதற்காக பிசிசிஐ மூலம் வாடகைக்கு எடுத்து அங்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக பல ஆயிரம் கோடிகள் செலவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி முதல் ஐபிஎல் அணிகள் துபாய்க்குச் சென்று கொண்டிருக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற இந்திய வீரர்களை வைத்து இந்தியாவிலேயே பயிற்சிகளை கொடுத்து நான்கு நாட்கள் பயிற்சி முடிந்த பின்னர் 21ஆம் தேதி ஒவ்வொரு அணியும் துபாய் சென்றது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் துபாய்க்கு செல்லும் போது இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா, மகேந்திரசிங் தோனி, அம்பத்தி ராயுடு, பியூஸ் சாவ்லா, கரண் ஷர்மா, முரளிவிஜய் போன்ற அனைத்து இந்திய வீரர்களும் சென்றார்கள். ஆனால் ஹர்பஜன்சிங் செல்லவில்லை. அவரது தாயார் உடல் நலம் குன்றி இருப்பதால் அவரை பார்த்துக் கொண்டே இரண்டு வாரம் கழித்துதான் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூர் அணி இரண்டு தினங்களுக்கு முன்னர் துபாய் சென்ற போது அதில் கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற அணி வீரர்கள் அனைவரும் தனியாக ஒரு விமானத்தில் சென்றனர். ஆனால், விராட் கோலியுடன் செல்லவில்லை, அதன் பின்னர் தனியாக சென்றார். இந்நிலையில் ஏன் விராட் கோலியை அணியுடன் அழைத்துச் செல்லவில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்…
மும்பையில் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட விராட் கோலி மேலும் கரோனா வைரஸ் சோதனை மேற்கொண்டார். இதன் காரணமாக அவர் அங்கு தனியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாகத் தான் அவரால் பெங்களூருவில் வரமுடியவில்லை. அதன் பின்னர் தனி விமானம் எடுத்து துபாய்க்கு வந்தார் விராட் கோலி என்று பேசியுள்ளார் அதன் நிர்வாகி.