ஒரே ஆட்டத்தில் 10 விக்கெட் எடுத்து கும்ளே சாதனையை சமன் செய்த 18 வயது பொடியன்!!!

உள்ளூர் போட்டியில் விளையாடிய மணிப்பூர் இளைஞர் ஒருவர் மூன்று ஹாட்ரிக்குடன் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகரில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட கூச்பெகர் டிராபியில் அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய அருணாசல் முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில், 16 ரன்கள் முன்னிலையுடன் அருணாசல் இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. மணிப்பூர் வீரர் இடதுகை பந்துவீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் (18), எதிரணியை துல்லியமாக பந்து வீசி திணறடித்தார்.

இவர் 9.5 ஓவர்கள் வீசி 11 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 3 முறை ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

இதையடுத்து, அருணாசல் அணி 2வது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் 7.5 ஓவரில் வெற்றிக்கு தேவையான 55 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

49.5 ஓவர்களில் மணிப்பூர் 122 ரன்கள் (அபிஜிஜெட் 48, கோவிந்த் மிட்டல் 50, டி.கே. தாகரா 4, 25), 55 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தனர். ஓவர்கள் (சுபாம் சௌஹான் 32 ).

இதற்கு முன்னர்,

20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே நிகழ்த்திய சாதனையை, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தற்போது சமன் செய்துள்ளார். 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அனில் கும்ப்ளே ஒரே நாளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது இந்த வரலாற்றுச் சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா சமன் செய்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை 20 ஆண்டுகளுக்குப் பின் யாசிர் ஷா சமன் செய்துள்ளார்.

யாசிர் ஷா ஜீத் ராவல் தொடங்கி வரிசையாக 8 விக்கெட்கள் அள்ளினார். இடையே ஹசன் அலி ஒரு விக்கெட் எடுத்தார். யாசிர் ஷா ஒரு ரன் அவுட்டும் செய்தார். நியூசிலாந்து அணியில் ஆறு வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கேன் வில்லியம்சன் மட்டுமே 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு வீரர் கூட அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதன் மூலம், ஒரே இன்னிங்க்ஸில் 8 விக்கெட் வீழ்த்தி யாசிர் ஷா சாதனை செய்தார். அவர் சாதனை அத்துடன் முடிந்துவிடவில்லை. நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தது பாகிஸ்தான். யாசிர் ஷா இரண்டாம் இன்னிங்க்ஸில் முதல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்களின் அனில் கும்ளேவும் ஒருவர். 2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டிகளில் 619 விக்கெட்டுகளும், டெஸ்ட்போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் அனில் கும்ளே தான். கடந்த 2007-ம் ஆண்டு அனில் கும்ளே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 37-வயது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டே, அதாவது 2008-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் அவர் தொடர்ந்து கிரிக்கெட் உலகத்தில் தான் இருந்து வருகிறார்.

அனில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், இந்திய அணி நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளை உள்ளூரில் வீழ்த்தி தொடர் சாதனை படைத்தது. பின்னர், விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அனில் கும்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.வ்

Sathish Kumar:

This website uses cookies.