உலக கோப்பை தொடரில் ரிச்சர்ட் பைபஸ் பதிலாக, பிலோய்ட் ரைபர் பயிற்சியாளராக செயல்படுவார் என மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிபர் ரிக்கி ஸ்கிரீட் பயிற்சியாளரை மட்டும் மாற்றவில்லை, தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த கோர்ட்னி பிரவுன் தற்போது மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராபர்ட் ரைன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
“ரைன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டது எங்களுக்கு சிறப்பான ஒன்று. அவர் அணிக்காக தற்காலிகமாக தலைவராக செயல்பட்டு வீரர்களை அவர்களின் மனநிலை சமீபத்திய நிலை பற்றி அறிந்து செயல்படுவார்” என ஸ்கிரீட் கூறினார்.
“அவரை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். எவரிடம் எப்பேர்ப்பட்ட வேலைகளை பெறமுடியும், அதே போல, சட்ட திட்டங்களை அறிந்து அதற்கேற்ப வீரர்களை சரியாக தேர்வு செய்வார். அதேபோல மேற்கிந்திய தீவுகள் அணியின் பாரம்பரியத்தை கருத்தில் கொள்வார் என நம்புகிறேன்” என்றார் ஸ்கிரீட்.
ஸ்கிரீட் மேலும் கூறியதாவது, அணியின் வீரர்கள் தேர்வுக்கான சட்டங்களில் பழைமையான சிலவற்றை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதனை தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து மாற்றியமைத்துள்ளோம். கட்டாயம் அதற்க்கு வீரர்களிடம் வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன் என்றார்.
வீரர்களுக்கான உடல்தகுதி பயிற்சியில் கட்டாய மாற்றம் தேவைப்பட்டது. அதை அமல்படுத்தியுள்ளோம். இதனை கருத்தில் கொண்டு தான் உலகக்கோப்பை க்கு செல்லும் அணியில் வீரர்கள் இடம்பெறுவார்கள் என்றார். அதில் ஒரு பகுதியாக உள்ளூர் தொடர்களில் செயல்பாட்டை கணக்கில் கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. வெளியானபின் வீரர்கள் கட்டாயம் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதையும் கூறியுள்ளதால், ஐபிஎல் தொடரில் ஆடும் வீரர்கள் இடையிலேயே நாடு திரும்பும் வாய்ப்பும் உள்ளது.