ஒவ்வொருவரும் அவரவருக்கான சிறந்த அணிகளை அறிவித்து வருகிறார்கள். நானும் இந்த விளையாட்டில் ஈடுபடுகிறேன் என்று கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த வீரர்கள் கொண்ட கனவு அணியை அறிவித்துள்ளார் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.
அவருடைய அணிக்கு இந்தியாவின் விராட் கோலி தலைமை தாங்குகிறார். எனினும் புஜாரா, அஸ்வின், பும்ரா போன்ற சிறந்த டெஸ்ட் வீரர்கள் யாரும் பாண்டிங் அணியில் இடம்பெறவில்லை. நான்கு இங்கிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கான ரிக்கி பாண்டிங்கின் கனவு அணி
விராட் கோலி (கேப்டன்), அலாஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், குமார் சங்கக்காரா, பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெய்ன், நாதன் லயன், பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI
இந்நிலையில்,
11 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதாகும் பீட்டர் சிடில் 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 30.33 என்ற சராசரியில் 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், கடைசியாக நடந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்றார். 20 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 2 டி20 சர்வதேச போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.
67 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்காக ஆடியதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்த பீட்டர் சிடில், ஓய்வு பெறுவது சற்று வருத்தமாகவே உள்ளது என்றார்.
ஒரு முறை அவரது ஆரம்பக் கட்டத்தில் சிடில், கவுதம் கம்பீரின் ஹெல்மெட்டைத் தாக்கும் பந்தை வீசினார், 2008-ல் மொஹாலியில் தன் அறிமுகப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை முதல் விக்கெட்டாகக் கைப்பற்றினார்.
2010-ம் ஆண்டு பெர்த்தில் தன் பிறந்த தினத்தன்று இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த ஹாட்ரிக் சிடில் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.
பீட்டர் சிடில் என்றால் அவரது அயராத உழைப்பு, எப்போது அழைத்தாலும் அணிக்கு வந்து எந்த வித புகாரும் இல்லாமல் இறுக்கமாக வீசி ஒரு சில விக்கெட்டுகளை முக்கியக் கட்டத்தில் எடுத்துக் கொடுப்பவர், மிகவும் கட்டுக்கோப்பான வீச்சாளர் என்பதே நினைவுக்கு வரும்.