ஹோட்டலில் பஞ்சாயத்து… ரெய்னா விலகிய உண்மை காரணத்தை கூறிய சிஎஸ்கே ஓனர் ஸ்ரீனிவாசன்!

ஹோட்டலில் பஞ்சாயத்து… ரெய்னா விலகிய உண்மை காரணத்தை கூறிய சிஎஸ்கே ஓனர் ஸ்ரீனிவாசன்!

சென்னை அணியில் இருந்து ரெய்னா விலகியதற்கான காரணம் இதுதான் என உண்மையை வெளியிட்டுள்ளார் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன்.

செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒரு மாத காலம் முன்னமே அனைத்து ஐபிஎல் அணியில் விளையாட உள்ள இந்திய வீரர்களும் இந்தியாவில் இருந்து துபாய் மற்றும் அபுதாபி சென்று நட்சத்திர ஹோட்டலில் தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அங்கிருந்தபடியே தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வீரர்களுக்கு இரண்டாவது கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 2 வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால்  அனைவரரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த சூழலில் தனது சொந்த காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். இது மேலும் பேரதிர்ச்சியை அனைவருக்கும் தந்தது. சுரேஷ் ரெய்னாவின் மாமா கொள்ளைக்காரர்களால் கொலை செய்யப்பட்டதால் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என செய்திகள் வெளிவந்தன. இது சற்றும் உண்மையில்லை என மறுத்துப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் வேறு ஒரு காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

சீனிவாசன் வெளியிட்ட தகவலில், தற்போது கிரிக்கெட் வீரர்கள் பலர் எளிதில் உணர்ச்சிவசப்படுகின்றனர். சென்னை அணி ஒரு குடும்பமாக பழகி வருகிறது. இதை வெளியிலிருக்கும் அனைவரும் நன்கு அறிவர். சுரேஷ் ரெய்னா திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது நிர்வாகத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், எந்தவித பாதிப்பும் இல்லை. இன்னும் சில வீரர்கள் விலகினால் கூட அணியின் கேப்டன் தோனி சமாளித்துக் கொள்வார். அவர் என்னிடம் உறுதி செய்துகொண்டார். மேலும் வீரர்களிடம் இணையம் வாயிலாக பாதுகாப்பை கேட்டறிந்து அவர்களின் நிலையை உறுதி செய்து கொண்டார்.

ரெய்னா இந்த ஐபிஎல் தொடரை விட்டு விலகியது எந்த அளவிற்கு பாதிப்பை கொடுத்திருக்கும் என பின்னர் உணர்வார் என குறிப்பிட்டார்.

மேலும் சீனிவாசன் கூறிய தகவலில், ஹோட்டலில் தங்கியிருந்த அறை ரெய்னாவிற்கு ஏதுவானதாக அமையவில்லை என்றும், தோனிக்கு அளிக்கப்பட்டிருக்கும் அறையைப்  போலவே அவருக்கும் வேண்டும் எனவும் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் விலகி இருக்கிறார் என்கிற தகவல்களும் கூறப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.