அவ்வளவு நம்பிக்கை எல்லாம் வேணாம் தம்பி…. உனக்கு இடம் கிடைப்பதே இப்ப சந்தேகம் தான்; ரிஷப் பண்ட்டை எச்சரித்த முன்னாள் வீரர் !!

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட் தன்னை முன்னேற்றி கொள்ளாவிட்டால் இந்திய அணியில் இருந்து புறக்கணிப்படும் நிலை ஏற்படும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், ஒரு சில போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடினால், அடுத்தடுத்த பல போட்டிகளில் மிக மோசமாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு வரை ரிஷப் பண்ட்டை தேடி வந்துவிட்ட போதிலும், ரிஷப் பண்ட் தனது தனிப்பட்ட ஆட்டத்திலும், பிட்னசிலும் போதிய கவனம் செலுத்தாது முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் விமர்ச்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டான நேரத்தில் கூட ரிஷப் பண்ட் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடாமால் தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் போன்ற விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து மிக சிறப்பாக விளையாடி வருவதால், இந்திய அணியில் ரிஷப் பண்டிற்கான இடமே கேள்விக்குறியாகி உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும், ரிஷப் பண்ட்டின் மோசமான பேட்டிங் குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “தற்போதைய இந்திய அணியின் சிறந்த ஆடும் லெவனில் ரிஷப் பண்ட்டிற்கு இடம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் மோசமாகவே உள்ளது. தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதையே ரிஷப் பண்ட் வாடிக்கையாக வைத்துள்ளார், பந்துவீச்சாளர்களுக்கு வேலையே வைக்காமல் தனது விக்கெட்டை மோசமான ஷாட்டால் ரிஷப் பண்ட்டே விட்டு கொடுக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் குறையே சொல்ல முடியாத அளவிற்கு விளையாடி வருகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.