எல்லா போட்டிகளிலும் ரிஷப் பன்ட் ஆல் ஆட முடியாது, தவானும் ஆடவேண்டும்: ரிக்கி பாண்டிங்

எல்லா போட்டிகளிலும் ரிஷப் பன்ட் ஆல் ஆட முடியாது, தவானும் ஆடவேண்டும் என டெல்லி கோச் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி பெரோசா கோட்லா மைதனாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் அரை சதம் விளாசினார். அந்த அணியின் அதிரடி வீரர் ரிஷப் பந்த் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைக் குவித்தது. பந்து வீச்சைப் பொறுத்தவரையில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 148 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட களமிறங்கிய சென்னை அணி சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டது. தொடக்க வீரர் அம்பதி ராயுடு 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசினார். சுரேஷ் ரெய்னா 30 ரன்களில் பெவிலியியன் திரும்பினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேதார் ஜாதவ் மற்றும் கேப்டன் தோனி நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சென்னை அணிக்கான அடுத்த போட்டி வரும் 31-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி. முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்து வென்றது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி. 2 புள்ளிகளுடன் தில்லி அணி இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளது. கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.