இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பேட்டிங் மிக அருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விருத்திமான் சஹா செயல்பட்டார். இவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படாததால் அவரை நீக்கிவிட்டு அதற்கு பதில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். தனக்குக் கொடுத்த வாய்ப்பை மிக சிறப்பாக செய்த ரிஷப் பண்ட் தனது திறமையை வெழிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 274 ரன்கள் எடுத்து அதிகமான ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியல் வரிசையில் முதலிடத்தில் இருந்தார். இவருடைய ஆவரேஜ் 68.5 .
இதுபற்றி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தெரிவித்ததாவது “இவருடைய பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய காரணம்” என்று இந்துஸ்தானுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது “கடந்த ஆண்டு இவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. தற்போது தனது கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியினால் அருமையாக விளையாடுகிறார். இடது கை பேட்ஸ்மேனான இவர் தனது திறமையை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்.
இவருடைய ஒவ்வொரு ஷாட்டும் மிக நேர்த்தியாக உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி 97 ரன்களை குவித்தார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இவர் தான் முக்கிய காரணம் என்று கூறும் அளவிற்கு இவருடைய பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.