ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு நடந்த முடிந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் முதல் இன்று வரை இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் நீங்க முடியாத இடத்தை பிடித்து விட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சரி, அதன் பின்னர் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சரி மிக அற்புதமாக விளையாடினார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியிலும் அவர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காண்பிக்க தவறவில்லை.
அதேபோல ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக களமிறங்கி 8 போட்டிகளில் மிக சிறப்பாக டெல்லி அணியை வழிநடத்தி தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி இருக்கும் அளவுக்கு மாயாஜாலங்களை ரிஷப் பண்ட் செய்து உள்ளார். அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியின் 2வது இன்னிங்சில் அவரது அதிரடி ஆட்டம் அனைத்து இந்திய ரசிகர்களையும் கவர்ந்தது.
பல்வேறு சாதனைகளை அடுத்தடுத்து செய்துவரும் ரிஷப் பண்ட் நிச்சயமாக வருங்கால இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருவார் என்று பார்த்தீவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2018-19ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் நான் அவரை கவனித்தேன்
2018-19ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ரிஷப் பண்ட் தேர்வானார். அந்த டெஸ்ட் தொடரில் ஸ்டாண்ட் பை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக நான் இருந்தேன். அப்பொழுது ரிஷப் பண்ட் கூட இணைந்து நிறைய விஷயங்களை நான் பேசினேன். ஒரு கிரிக்கெட் வீரராக இளம் வயதில் இவ்வளவு விஷயங்களை அவர் செய்தது என்னை ஆச்சரியப்படுத்தியது.
நாளுக்கு நாள் தன்னுடைய கடின உழைப்பால் தன்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை அவர் மேம்படுத்தியது அப்போதே என் கண் முன்னால் தெரிந்தது. நிச்சயமாக இவர் இந்திய அணியில் வருங்கால நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வருவார் என்று நான் அப்பொழுதே தீர்மானித்து விட்டேன்.
ரிஷப் பண்ட் வருங்கால இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருவார்
ரிஷப் பண்ட் எந்த வகை கிரிக்கெட் போட்டி ஆனாலும் சரி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காண்பிக்க தவறுவதில்லை. இந்த குணம் அவரை வருங்காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக அமையும். மேலும் தொடர்ச்சியாக அவளது கிரிக்கெட் ஆட்டத்தில் நிறைய மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில் நிச்சயமாக வருங்கால இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக ரிஷப் பண்ட் நிச்சயமாக வலம் வருவார் என்று பார்த்தீவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பார்த்தீவ் பட்டேல் கொரோனாவிலிருந்து குணமாகி நல்ல உடல் நலத்துடன் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் அனைத்து போட்டிகளிலும் களம் இறங்கி விளையாட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.